கிருஷ்ணகிரி, ஜுன் 2- போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் சரிபாதி பெண்கள் உட்பட 1,000க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்யும் ஷூ தொழிற்சாலையும், சிறு சிறு தொழிற்கூடங்களும் உள்ளன. இங்கு மிகக் குறைந்த அளவிலேயே நிரந்தர தெழிலாளர்கள் உள்ளனர். அதுவும் மிகக் குறைந்த ஊதியத்திலேயே வேலை செய்கின்றனர். மேலும் இவர்களுக்கு போதிய சுகாதார, பாதுகாப்பு வசதிகள் இல்லை, இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் அவர்கள் வசிக்கும் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் தொற்று பரவி வருகிறது. முழு பொதுமுடக்க காலத்திலும் தொழிற் கலை மூடப்படாமல் இயங்கிக் கொண்டி ருப்பட்தால் தொற்று வேகமாக அதிரிக்க வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட ஆட்சியரும், சுகா தாரத் துறையும் தலையிட்டு இந்த தொழிற் சாலையை பொதுமுடக்க காலம் வரை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போச்சம் பள்ளி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.