districts

img

பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டியை  அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை

 தஞ்சாவூர், ஜூலை 7-  தஞ்சாவூர் மாவட்டம் செங்கமங்கலம் ஊராட்சியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்  தேக்கத் தொட்டி உள்ளது.  மிகவும் பழுதடைந்த நிலையில்  எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.  இது, மாணவர்கள் பேருந்துக்காக காத்திருக்கும் இடமாகவும் உள்ளது. நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து  விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து கிராமத்தின் சார்பில் பல்வேறு புகார்  மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  எனவே, தஞ்சை ஆட்சியர் ஆய்வு செய்து நீர் தேக்கத்  தொட்டியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் ஆட்சி யருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.