tamilnadu

தலித் என்பதால் குடியிருப்பை காலி செய்யுமாறு துன்புறுத்துவதா?  முதியவர் தீ்க்குளிக்க முயற்சி

பெரம்பலூர்: பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. ஆட்சியர் வே.சாந்தா தலைமை வகித்தார். கூட்டத்தின் போது அலுவலக வாசல் முன்பு முதியவர் ஒருவர் திடீரென்று உடலில் மண்ணெண்னயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் காப்பாற்றினர். பின்னர் அவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் பெரம்பலூர் வடக்குமாதவி சாலை அருகே உள்ள ஏரிக்கரை பகுதியில் வசிப்பதாகவும், அந்த இடத்திற்கு ஆட்சியரிடம் பட்டா கேட்டு விண்ணப்பித்து நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் அப்பகுதியில் தான் ஒருவர் தான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியில் உள்ள சிலர் காலி செய்யக் கூறி துன்புறுத்தி வந்ததாக புகார் அளித்திருந்த நிலையில் கடந்த 12.3.2020 அன்று இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்ததால் அங்கு சென்றிருந்த அதே நேரத்தில் தன்னுடைய ஒரு லட்சம் மதிப்பிலான கூரை வீட்டை அப்பகுதியினர் பிரித்து நாசம் செய்து விட்டனர் என மனுவில் தொவித்துள்ளார். வீட்டை இழந்ததாலும் உரிய நடவடிக்கை எடுக்காததாலும் மனமுடைந்து தீக்குளிக்க முடிவெடுத்ததாக தொவித்துள்ளார். பின்னர் முதியவரை காவ லர்கள், அறிவுரை கூறி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.