tamilnadu

img

அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை

பெரம்பலூர், அக்.24- பெரம்பலூர் தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் சுவீட்ஸ் அன்ட் பேக்கரி நிறுவனம் பெரம்பலூர், சென்னை, திருச்சி, கரூர், அரியலூர், துறையூர், ஆத்தூர், சேலம், நாமக்கல் மற்றும் புதுச்சேரி ஆகிய பெருநகரங்களில் செயல்பட்டு வருகிறது. அஸ்வின்ஸ் நிறுவன தலைவர் கே.ஆர்.வி.கணேசன் அளித்த பேட்டியில், இனிப்புகளை நாம் மட்டும் உண்ணாமல் நமது உறவினர்களுக்கும் நட்புகளுக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் பகிர்ந்து நம் நல்லுறவு மற்றும் வாழ்த்துக்களை பகிர்வது மேலான பண்பாடு. அத்தகைய மேலான பண்பாடான இனிப்புகளை அஸ்வின்ஸ் நிறுவனத்தில் பாரம்பரிய முறையில் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி ஸ்பெஷலாக அதிரசம், தட்டை, மிக்சர், தேன்குழல், முறுக்கு, அச்சு முறுக்கு, கைமுறுக்கு, இனிப்பு சீடை, சோமாசி, நெய்உருண்டை, பெரிவிளாங்கா உருண்டை, பாதாம் அல்பா, குலோப்ஜாம் போன்ற இனிப்பு, கார வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்களது அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் கிளைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை துவங்கப்பட்டுள்ளது.  ஸ்வீட்ஸ், கார வகைகள் கிலோ அளவிலும், விஐபி கிப்ட் பாக்ஸ்கள் ரூ.625, ரூ.325, ஸ்பெஷல் கிப்ட் பாக்ஸ் ரூ.700, ரூ.500, ரூ.360 க்கும் கிடைக்கும். தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நேரிலோ அல்லது 73730-41434, 97508-77111 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆர்டர்கள் கொடுத்து பயனடையலாம் எனத் தெரிவித்தார். பேட்டியின் போது அஸ்வின்ஸ் மேலாளர்கள் அசோக், சூரி, நிதி அலுவலர் சசிக்குமார், மனிதவள அலுவலர் சரவணன், சூப்பர்வைசர் பாரி, கணக்கர் கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.