பெரம்பலூர், ஜூன் 8- தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றம் மற்றும் தோழர் ஜீவா, அம்பேத்கர் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தினர், பெரம்பலூர் மாவட்டத் தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்திற்கு நிவாரண நிதி வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் பல்வேறு வேடம் அணிந்து ஆட்டம்- பாடல்களு டன் கலை நிகழ்ச்சிகள் நடத்தி மனு கொடுத்தனர். தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்ற மாவட்டத் தலைவர் சுப்ரமணி யன், செயலாளர் ரமேஷ், பொருளா ளர் பெரியசாமி மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளரிடம் (பொது) சங்க பிரதிநிதிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நாட்டுப்புறக் கலைகளை மட்டுமே வாழ்க்கையாக கொண்டு தெருக்கூத்து, தாரை, தப்பட்டை, டிரம்செட், மேளம் ஆகியவை திரு மணம், திருவிழா போன்ற சுபநிகழ்ச்சி கள் மற்றும் துக்க காரியங்களுக்கு தப்பாட்டம், மேளம் போன்ற இசைக் கருவிகளை வாசித்தும், நடனமாடி யும் அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்தி வரு கிறோம். கொரோனா ஊரடங்கு பிறப்பிக் கப்பட்டு அனைத்து விதமான நிகழ்ச்சி களும் தடை செய்யப்பட்டுள்ளதால், நாட்டுப்புற கலைஞர்களுக்கு எந்த விதமான வருமானமும் இல்லாமல், உணவுக்கு வழியிலாமலும் மிகவும் சிரமத்தில் இருக்கிறோம். அரசாங்கத் தால் அறிவிக்கப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான நிவாரணத் தொகை இதுவரை எங்களுக்கு வழங் கப்படவில்லை. அமைப்பு சாரா நல வாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றவர்கள், அட்டை பெறாதவர்கள் என அனைத்து நாட்டுப்புற கலைஞர்க ளுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் உள்ளிட்டவை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.