tamilnadu

img

பானி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆன உயர்வு

கடந்தசில தினங்களுக்கு முன் ஒடிசா மாநிலத்தை கடுமையாக தாக்கிய பானி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மழையால் மிக கடுமையான சேதத்தை ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது.

பானி புயலால், ஒடிசாவின் 14 மாவட்டங்களில் உள்ள 14,000 கிராமங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. . மின்சாரம், குடிநீர் வசதிகள், தொலைத் தொடர்பு சேவை ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவற்றை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகின்றன. அதேபோல், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில், மாநில அரசு ரூ.1,600 கோடி அறிவித்துள்ளது. ஆனால் புயலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் இயல்பு நிலை திரும்பவில்லை. மின்சாரம் இன்றி பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன. குடிநீர் இன்றி மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், புவனேசுவரம் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது