குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்த மாநகராட்சி
திருப்பூர், ஆக.18- திருப்பூரில் வாலிபர் சங்கத்தின் போராட்டத்தின் எதிரொலியாக குடி நீர்க் குழாய் உடைப்பை உடனடி யாக சரிசெய்யும் பணியில் மாநக ராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், வடக்கு ஒன்றியம் தியாகி குமரன் காலனி நான்காவது வீதியில் 100க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின் ்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக குடிநீர்க் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் குட்டை போல் தேங்கி சாக்கடையில் கலந்து வருகிறது. இதனை சரிசெய்ய சம்மந் தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவொரு பலனு மில்லை. இதையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து ”மீன் பிடிக்கும்” நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் வாலிபர் சங்கத்தின் வடக்கு ஒன்றிய தலைவர் சதீஸ்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் இம்ரான், விஜயபுரி கார் டன் மற்றும் அப்பகுதி வாழ் பொது மக்கள் பலர் பங்கேற்றனர். இத்தக வலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த மாநகராட்சி முதலாவது மண்டல அதி காரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, குழாயை சரிசெய்து, குட்டைபோல் தேங்கிய நீரை மூடும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.