மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் அறிவிப்பு
தஞ்சாவூர், ஜன.11- தென்னிந்தியாவிலேயே தூய்மை யான நகரங்களின் பட்டியலில் தஞ்சா வூர் மாவட்டம் மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி முதலிடத்தை பெற்றுள் ளது. மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை நாடெங்கும் செயல்படுத்தி வருகிறது. நகரின் தூய்மை குறித்து மத்திய அரசு காலாண்டுக்கு ஒரு முறை சர்வே நடத்தி, அதன் முடிவு களை தில்லியில் கடந்த டிச.31 அன்று நடைபெற்ற விழாவில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளி யிட்டார். அதில் 25 ஆயிரம் மக்கள் தொகை வரையிலான நகரங்கள் பிரிவில் தென் னிந்திய மாநிலங்களில் மேலத்திருப் பூந்துருத்தி பேரூராட்சி முதல் காலா ண்டில் முதலிடமும், இரண்டாம் காலா ண்டில் இரண்டாம் இடமும் பெற்று தென் இந்தியாவின் தூய்மையான நக ரம் என சாதனை படைத்துள்ளது. மேலும், முதல் காலாண்டில் அகில இந்திய அளவில் 149-ஆவது இடமும் பிடித்துள்ளது. அகில இந்திய அளவில் தூய்மையான நகரங்களில் முதல் 150 நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து இடம்பெறும் ஒரே நகரம் என்ற பெருமை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலத்திருப்பூந்து ருத்தி பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் கூறுகையில், இந்த பேரூ ராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள் ளன. 9,074 பேர் வசித்து வருகின்ற னர். இங்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், ஜல் அபி யான் போன்ற திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. பேரூராட்சி யில் சேகரமாகும் குப்பைகளை வீடு களுக்கே சென்று பணியாளர்கள் தரம் பிரித்து வாங்கி கொள்கின்றனர். தெருக் களில் ஆங்காங்கே குப்பைத் தொட்டி களும் வைக்கப்பட்டுள்ளன. குப்பை களை சேகரித்து, குப்பைக் கிடங்கினை வளம் மீட்புப் பூங்காவாக உருவாக்கி யுள்ளோம். தெருக்கள் அனைத்தும் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக காணப்படுகிறது. பொதுமக்கள் வழங்கும் குப்பை களில் கிடைக்கும் பால் கவர், எண் ணெய் கவர்களை கொண்டு விதைப் பையும், உரமும், தெருக்களில் கிடைக்கும் புங்கன் மர விதைகள் உள்ளிட்ட பல்வேறு விதைகளை கொண்டு “ஜீரோ காஸ்ட்” என்ற திட்டத்தில் மரக்கன்றுகளை உரு வாக்கி அதனை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். குப்பைகளை தரம் பிரித்து அதில் உயிர் உரங்களை உற்பத்தி செய்வது, மண்புழு உரங்களை உருவாக்குவது, பிளாஸ்டிக் பைகளை சாலைகள் அமைப்பதற்கு பயன்படுத்துவது என பலப் பணிகளை செய்து வருகிறோம். குப்பைகளை தரம் பிரிக்கும் பூங்காவை சுற்றிலும் வாழை மரங்கள் வைக்கப்பட்டு, எப்போதும் “ரிசார்ட்” போன்று அமைத்துள்ளோம். துப்பு ரவு பணியில் ஈடுபடுவோர் அவசியம் கையுறை, முகச்சகவசம் அணிந்து கொள்ள அறிவுரை வழங்குகிறோம். பேரூராட்சி அலுவலகத்தில் கண்கா ணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு, எவ்வித முறைகேடுகளும் இன்றி பொதுமக்களுக்கு நேர்மையான சேவையை வழங்கி வருகிறோம். அதே போல் பேரூராட்சியில் என் னென்ன வசதிகள் கிடைக்கும் என்பதை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறி விப்பு பலகையாக விளம்பரப்படுத்தி யுள்ளோம்.
பணியாளர்களின் வருகைப் பதிவேட்டை பயோ மெட்ரிக் முறை யிலும், பேரூராட்சியின் குப்பை அள் ளும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி யும் பொருத்தி அதனை கண்காணித்து வருகிறோம். பொது மக்கள் நகரின் தூய்மை தொடர்பான புகார்களை வாட்ஸ் அப் மூலம் தெரிவித்தால், பேரூ ராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்கிறது. இதையெல்லாம் தூய்மை இந்தியா திட்டத்தின் அதிகாரிகள் களஆய்வு செய்து, பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து, தென் னிந்திய அளவிலான தூய்மையான நகரங்களின் பட்டியலில் மேலத்திருப் பூந்துருத்தி பேரூராட்சிக்கு முதல் காலாண்டில் முதலிடமும், இரண்டா வது காலாண்டில் இரண்டாமிடமும் வழங்கியுள்ளது எங்களது பேரூராட்சி பொதுமக்களின் ஒத்துழைப்பும், பணி யாளர்களின் அர்ப்பணிப்புமே கார ணமாகும். கடந்தாண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்கு தென்னிந்திய அளவில் சிறந்த பேரூராட்சியாக இப் பேரூராட்சி மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு, அதற்கு விருதும், பாராட்டுச் சான்றும் வழங்கப்பட்டுள் ளது” என்றார்.