tamilnadu

img

மின் ஊழியர் மாநில மாநாடு நெல்லையில் துவங்கியது

திருநெல்வேலி, ஆக.17- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 16ஆவது மாநில மாநாடு திருநெல்வேலியில் சனியன்று (ஆக.17) எழுச்சிமிகு முழக்கத்துடன் துவங்கியது.  இம்மாநாடு சனி, ஞாயிறு, திங்கள் (ஆக.17,18,19) ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. தோழர் ஜே. ஹேமச்சந்திரன் நினைவிடத்திலிருந்து கொண்டுவந்த கொடி மரத்தை அமைப்பின் முன்னாள் மாநில துணை தலைவர் பி.தியாகராஜன் பெற்றுக் கொண்டார். வெண்மணி தியாகிகள் ஜோதியை நெல்லை மாவட்ட சிஐடியு செயலாளர் ஆர்.மோகன், .ஜானகி ராமன் நினைவு கொடியை முன்னாள் மாநில துணை தலைவர் கே.செல்லப் பன், வி.பி.சிந்தன் நினைவு ஜோதியை முன்னாள் மாநில துணை தலைவர் பி.குமாரவேல், ஏ.நல்லசிவன் நினைவு ஜோதியை முன்னாள் மாநில செயலா ளர் எஸ்.முத்துகுமாரசாமி, பி.சி.வேலா யுதம் நினைவு ஜோதியை ஓய்வு பெற் றோர் நல அமைப்பின் துணை பொதுச் செயலாளர் எஸ்.ராஜாமணியும் பெற்றுக் கொண்டனர். மாநாட்டுக் கொடியை விண்ணதிரும் முழக்கத்தினிடையே மத்திய அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் ஏற்றி வைத்தார். 

பிரதிநிதிகள் மாநாட்டுக்கு எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணை பொது செயலாளர் கே.ரவிச்சந்திரன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக்குழு தலைவர் எம்.பீர்முகமது வரவேற்றார். சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் துவக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் எஸ்.இராஜேந்தி ரன், எம்.வெங்கடேசன், டி.சி.கமல கண்ணன் ஆகியோர் வேலை-வரவு செலவு அறிக்கைகள் சமர்ப்பித்தனர். சம்மேளன செயலாளர் பெரு மாள்சாமி, ஐஎன்டியுசி பொதுச்செயலா ளர் டி.வி.சேவியர், பொறியாளர் யூனி யன் நெல்லை மண்டல செயலாளர் சுந்தர்ராஜ், ஏஇஎஸ்யு பொதுச் செய லாளர் சந்திரசேகரன், தொழிலாளர் மற்றும் பொறியாளர்அமைப்பு செயலா ளர் வீராசாமி, பொறியாளர் கழகம் மாநில துணைத் தலைவர் பைரோன் ஸ்டீபன், தொமுச தலைவர் (நெல்லை) நடராஜன், பொறியாளர் சங்க செயலா ளர் ரெமிங்டன் வி.ராஜன், தமிழ்நாடு மின்வாரிய என்எல்ஓ சங்க நிர்வாகி முத்துக்குமாரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து அறிக்கைகள் மீதான பிரதிநிதிகள் விவாதம் தொடங்கியது. எம்.மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட மூத்த தோழர்களுக்கு மரி யாதை செய்து துண்டு அணிவிக்கப் பட்டது. 

மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வாக பிரதிநிதிகள் விவாதம் தொடர்வதுடன், வாழ்த்துரைகளும் மாலையில் சிஐடியு 50 ஆண்டு கால வரலாறு என்கிற தலைப்பில் கருத்த ரங்கமும் நடைபெற உள்ளது. திங்க ளன்று நிர்வாகிகள் தேர்வு, பேரணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இவற்றில் மாநில தலைவர் அ. சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன், நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ஆர்.கருமலையான் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளனர்.