சென்னை, ஆக.26- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண மாக தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் கூறி யுள்ளது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனத்தாலும் குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக் கல், தேனி, நாகை, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக் கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. தென் தமிழக கடலோர பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் அந்தப் பகுதி யில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் கிழக்கு மத்திய அந்தமான் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப் பட்டுள்ளது.