மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் நூறு பேருக்கு அர்ப்பணிப்போடு கொரானா காலத்தில் பணியாற்றுவதை பாராட்டி அரிசி மற்றும் காய்கறிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியூ சார்பில் ஞாயிற்றுகிழமை வழங்கப்பட்டது.
சிபிஎம் மாவட்ட செயலாளர் வீரபாண்டி தலைமையில் ஒன்றிய செயலாளர் ஆண்டி முன்னிலையில் பாராட்டு நிகழ்வு நடந்தது. சிஐடியூ மாவட்ட செயலாளர் வீரையா,கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர் ஆரோக்கியதாஸ், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியம், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார்,கப்பல் வைஸ் கேப்டன் தங்கமணி, வாலிபர் சங்க மாவட்ட பொறுப்பாளர் பாரதி,தமுஎகச செயலாளர் பாரதிஅச்சக தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.