முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
சென்னை, ஏப்.22- கொரோனா தொற்று பரவலை தடுக்க அறி விக்கப்பட்டிருக்கிற ஊரடங்கின் காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திற னாளிகளுக்கு நிவாரணத் தொகை மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கி காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாது காக்க ஊரடங்கு உத்தரவு கடந்த 28 நாட்களாக அமலில் இருந்து வருகிறது. அனைத்துப்பகுதி மக்களும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகம் முழு வதுமுள்ள மாற்றுத்திறனாளிகள் மிக மோச மாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு அறி வித்துள்ள நிவாரணத் தொகை எதுவும் தமிழ் நாட்டிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கப் பெறவில்லை.
தமிழக அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரணத் திட்டங்கள் அறிவித்துள்ள போதிலும், மாற்றுத்திறனாளி களுக்கு எந்த நிவாரணத் திட்டமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் மாற்றுத் திறனாளிகள் பசி, பட்டினியோடு பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மாற்றுத் திறனாளிகள் உடல்ரீதியாக பல்வேறு இடர் பாடுகளை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலை மையை தாங்கள் அறிந்ததே. இதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திரம் வழங் கப்படும் ஓய்வூதியமும் கடந்த சில மாதங்க ளாக வழங்கப்படவில்லை.
எனவே, மாற்றுத்திறனாளிகளை இப்பெரும் சோகத்திலிருந்து காப்பாற்றிட மாற்றுத்திற னாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 5 ஆயி ரம் ரூபாயும், உணவுப் பொருட்களும் இலவச மாக வழங்கிட வேண்டும்.
உதவிகோரும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்வதற்காக மாற்றுத்திறனாளி கள் நலத்துறை சார்பில் உதவி எண் ஒன்று துவங்கப்பட்டிருந்தாலும், அந்த இணைப்பு முறையாகச் செயல்படுவதில்லை. அப் படியே தொடர்பு கிடைத்தாலும் உரிய பதில் ஏதும் கிடைப்பதில்லை என்று மாற்றுத்திற னாளிகள் கூறுகின்றனர். எனவே, இப்பிரச்ச னையை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தத் தொகை கிடைத்தால் மட்டுமே இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மாற்றுத் திறனாளிகள் வாழ முடியுமென்பதோடு, இவர்களது அன்றாட மருத்துவத் தேவை களையும் ஈடு செய்ய முடியும். மத்திய அரசு வழங்குவதாக அறிவித் துள்ள நிவாரண உதவிகளையும் தமிழக முதல்வர் மாற்றுத்திறனாளிகளுக்கு பெற்றுத் தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.