tamilnadu

img

ரூ.2,131 கோடியில் புதிய அறிவிப்புகள்

சென்னை,ஜூலை 15- தமிழக சட்டப்பேரவை யில், நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித்துறை மீதான மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்த முதலமைச்  சர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் ரூ. 2 ஆயிரத்து 131  கோடியே 88 லட்சம் மதிப்பி லான புதிய திட்டங்களை புதிய அறிவிப்புகளை  வெளி யிட்டார். அதன் விவரம் வரு மாறு:- நெல்லை மாவட்டம்  தெற்கு கல்லிடைக்குறிச்சி யில் எலுமிச்சையாறு ஆற் றின் குறுக்கே ரூ. 110 கோடி யில் நீர்த்தேக்கம் கட்டப்ப  டும். சேலம் அக்ரஹாரம் கிரா மத்தில் ரூ. 27 கோடி மதிப் பீட்டில் ஏரி அமைக்கப்படும், விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தில் கசிவுநீர் குட்டை அமைக்கப்படும். கரூர் மாவட்டம் நஞ்சை புகலூர் கிராமத்தில் ரூ. 495  கோடியில் கதவணை அமைக்கப்படும்.

நாமக்கல்  மாவட்டம் பொடங்கம், ராம நாதபுரம் மாவட்டம் செவ்வூர்,  குடியூர் கிராமங்களில் தடுப்  பணைகள் கட்டப்படும். பெரம்பலூர் மாவட்டம் வி. களத்தூர், பாண்டகப்பாடி, திருவண்ணாமலை வெங்க ளத்தூர், ஈரோடு மாவட்டம் ஜம்பை, சேலம் மாவட்டம் கோட்டைமேடு, கடலூர் மாவட்டம் சேப்பாக்கம், பூதாமூர், மதுரை மாவட்டம் சாத்தன்குடி, திரளி ஆகிய  கிராமங்களில் தடுப்பணை கள் கட்டப்படும். தஞ்சாவூ ரில் ராஜாமடம், பொன்னவ ராயன் கோட்டை கிராமங்க ளில் தடுப்பணையும், ஏனாதி யில் தடுப்பணையுடன் கூடிய  நீரேற்று பாசனத் திட்டமும் ரூ. 32 கோடியில் மேற்கொள் ளப்படும். ராமநாதபுரம் மாவட்டம் சாத்தக்கோன்வலசையில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில்  நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் ரூ. 61 கோடி  மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். செங்கல்பட்டு குள வாய் ஏரியை மீட்டெடுத்து சென்னையின் நீட்டிக்கப் பட்ட புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரம் மேம்படுத் தப்படும். இவ்வாறு முதலமைச்சர் அறிவித்தார்.