வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம். கதிர் ஆனந்தை ஆதரித்து தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வியாழனன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளையும், தமிழகத்திற்கு எதிரான வஞ்சனைகளையும் கடுமையாக சாடிய அவர், தமிழகத்தில் அதிமுக அரசு, மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு மக்களை மேலும் மேலும் துயரத்தில் ஆழ்த்தி வருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.