மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை,நவ.13- காவல்துறைக்கு உபகர ணங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் வழக்கினை உடனடியாக விசாரிக்க உள்துறை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்ற தாக புகார் எழுந்த நிலையில், அது தொடர்பாக விசாரிக்கு மாறு புதிதாக பொறுப்பேற்ற டிஜிபி திரிபாதி உள்துறை செய லாளருக்கு கடிதம் எழுதியதாக வும், அதனடிப்படையில் உள்துறை செயலாளர் ஆணை யிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை நட வடிக்கை எடுக்காதது விசார ணையை தாமதப்படுத்தும் செயல். முறைகேடு மீது நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளர் உத்தரவிட்டும் கோப்புகளை ஏன் மூட்டை கட்டி வைத்திருக்க வேண்டும்? இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரித்து குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி, உரிய தண்ட னை பெற்று தருவதோடு, ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து நம்பகத்தன்மையை நிலை நாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.