காஞ்சிபுரம், செப்.1- சிஐடியு மாநில மாநாட்டை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்க ளுக்கு சிஐடியு சார்பில் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. சிஐடியு-வின் தமிழ் மாநில மாநாடு இம் மாதம் 19 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரைக்கும் காஞ்சி புரத்தில் நடைபெற உள்ளது. இம் மாநாட்டை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் காஞ்சி புரம் மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டன. அடுத்தக் கட்டமாக, சிறப்புக் கருத்தர ங்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக ‘தொழிலாளர் உரிமை காப்போம்’, ‘சமூக ஒடுக்குமுறை தகர்ப்போம்’, ‘போதைப் பொருள் ஒழிப்போம்’ என்ற முழக்கத்துடன் ஞாயிறன்று(செப்.1) காஞ்சிபுரம் பெரியார் நகரிலிருந்து தேரடி வரை மினி மாரத்தான் நடத்த ப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த இளை ஞர்கள், காஞ்சிபுரம் கல்லூரி மாணவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட னர். போட்டியைக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் பங்கேற்றோர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேரடிக்கு வந்து சேர்ந்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி,பச்சையப்பாஸ் ஜவுளி நிறுவன உரிமையாளர் பி.டி.சுந்தர் கணேஷ் , சிஐடியு மாவட்டச் செயலா ளர் இ.முத்துக்குமார், மாவட்டப் பொரு ளாளர் ஜி.வசந்தா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் பரிசு...
சேலம் மாவட்டம் எடப்பாடி ராமச்சந்திரனுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், சென்னையை சேர்ந்த ஜெகதீஷ்க்கு இரண்டாவது பரிசாக ரூ.7500, சேலம் தங்கதுரைக்கு மூன்றாவது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. பெண்களில் முதலிடம் பிடித்த கேளம்பாக்கம் திலகவதி, இரண்டாவதாக வந்த பி.தேவிப்பிரியங்கா, மூன்றாவது இடம் பிடித்த மகா லட்சுமி ஆகி யோருக்கு போட்டியில் பங்கேற்ற மைக்காகவும், மாற்றுத்திறனாளியான பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைச்செல்வனுக்கும், 8 வயதுச் சிறுவனான சென்னை நசரத்பேட்டைஎஸ்.விஜய்(8) ஆகி யோருக்கு ரெக்கப் பரிசும் போட்டி யில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றும் வழங்கப்பட்டது.
போதையில் முதலிடம்...
பரிசளிப்பு விழாவில் உரையாற்றிய டி.கே.ரங்கராஜன், “போதைக்கு அடிமையானவர்கள் பட்டியலில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடத்தில் இருப்பதால் போதைப் பொருள்களை ஒழிக்கவும், அதனால் ஏற்படும் தீமைகளை இளைஞர்கள் தெரிந்து கொள்ளவும், தொழிலாளர்களின் உரிமைகளை காக்கவும்,சமூக ஒடுக்குமுறைகளை தடுக்கவும் மினி மாரத்தான் நடத்தப்பட்டது” என்றார்.
கட் அவுட் கலாச்சாரத்தை ஒழியுங்கள்!
திரைப்பட இயக்குநர் லெனின்பாரதி பேசும் போது, “கதாநாயகர்களை கடவுள்களாக இளைஞர்கள் நினைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கதாநாயகனுக்கும் தனித்தனி குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். போதை யிலேயே மிகப் பெரிய போதை சினிமா கதாநாயகர்களுக்கு கட் அவுட் வைப்பதும், பாலாபிஷேகம் செய்வதும் தான் என்பதை இளை ஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கதாநாயகனும் கோடி, கோடியாக சம்பாதித்துக் கொண்டி ருக்கிறார்கள். இளைஞர்களாகிய நீங்களும் அவர்களைப் போல சம்பாதியுங்கள்,கதாநாயகர்களுக்கு கட் அவுட் வைக்கும் கலாச்சாரத்தை விட்டொழித்து விட்டு நீங்களும் சாதனைகளைப் புரிந்து சரித்திரத்தில் இடம் பெறுங்கள்” என்றார்.