tamilnadu

img

பசியால் வாடும் பழங்குடி மக்களை பாதுகாக்க முதல்வருக்கு கடிதம்

சென்னை, ஏப்.18- கொரானா நோய்த்தொற்று பர வலை தடுக்கும் வகையில் அமல்ப டுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தர வால் பாதிக்கப்பட்டுள்ள விளிம்பு நிலையில் உள்ள பழங்குடி மக்களை  பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு  பழங்குடி மக்கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இது சம்பந்தமாக தமிழக முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சங்  கத்தின் மாநிலத் தலைவர் பி. டில்லி பாபு, பொதுச் செயலாளர் இரா.சரவ ணன் ஆகியோர் அனுப்பியுள்ள மனு  வருமாறு:-

கொரோனா என்ற வைரஸ் தொற்று  உலக நாடுகளையே உலுக்கி போட் டுள்ளது. தமிழகத்தில் இத்தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்தி உரிய  சிகிச்சை அளிக் தங்களது அரசின் சீரிய முயற்சி பலப்படுத்த வேண்டி யுள்ளது. இருப்பினும், ரத்த பரிசோத னையும், பி.ஆர்.சி டெஸ்டும், தனி மைப்படுத்தப்பட்டோர் களுக்கும் உடனடியாக பரிசோதனை செய்து  உரிய சிகிச்சையை  அவசர பணி களை மேற்கொள்ள வேண்டியுள் ளதை தாங்கள் அறிவீர்கள். அதற்கான  பணியை தற்போது துவக்கியுள்ளீர்கள்.

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவினை நாடே கடைபிடித்து வருகின்றது. இதன் மூலம் இந்நோய் பரவுவதை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுத்து  நிறுத்திடவும் பெரும் பங்காற்றி யுள்ளது. இச்சூழலில் மாநில அரசு அறி வித்துள்ள ஊரடங்கு காலத்திற்கான மார்ச் 23 முதல் ஏப்ரல் 14 வரைக்கான நிவாரணம் ரூ.1000ம் மற்றும் குடும்ப அட்டைகளுக்கு 20 கிலோ அரிசி, 1கிலோ பருப்பு, 1 கிலோ பாமாயில், 1 கிலோ சர்க்கரை விநியோகிப்பது என்பது தமிழகத்தில் பழங்குடி மக்கள் வாழும் பெரும்பான்மையான பகுதிகளுக்கு சுமார் 40 சதமான மக்க ளுக்கு உணவுப் பொருட்கள் சென்ற டையவில்லை. இருப்பினும் 21 நாட்க ளான ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதியு டன் முடிவடைகிறது என்ற நம்பிக்கை யால் பல்வேறு பசி, பட்டினிகளுக் கிடையில் உயிரை கையில் பிடித்துக்  கொண்டு, கால் வயிறு, அரை வயிற்று  கஞ்சி குடித்து தான் இன்றைக்கும் தமி ழகத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்  பட்ட பழங்குடி மக்கள் வாழ்க்கையை கடந்து வருகின்றனர்.

தமிழக அரசு வழங்கியுள்ள 20 கிலோ அரிசி 5 பேர்களைக் கொண்ட ஒரு  குடும்பத்திற்கு ஒரு வேளைக்கு ஒரு கிலோ அரிசி என்றால் கூட ஒரு வாரம்  அல்லது 10 நாட்களுக்கு மட்டுமே இவர்களுக்கான உணவாகும். மீதம்  11 நாட்கள், எந்த அரிசியை இவர்கள்  உண்பது என்பது அம்மக்களின் மத்தி யில் எழும் வலுவான கேள்வியாகும். கிராமப்புறங்களில் பிற சமூகத்தி னரைப் போல் பழங்குடி இன மக்களது  வாழ்க்கையை ஒப்பிட முடியாது என்பதை முதலமைச்சர் நன்கு அறிந்தி ருப்பீர். இவர்களுக்கு பிற சமூகத்தி னர் கடன் கொடுப்பதோ அல்லது முன்  பணம் தருவதோ மிக சொற்பமே,  இவர்களுடைய அன்றாட உழைப் பிலே வாழ்ந்து வருபவர்களாகவர், எனவே அரசின் திட்டங்கள், நிவார ணம், உணவு பொருட்கள் முழுமை யாக அம்மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

ஊட்டியில் பழங்குடி மக்களுக்கு அரிசி, பணம் வழங்காததால் கூட லூர் செருமுள்ளி ரேசன் கடை ஊழியர் கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். திருவள்ளூர், காஞ்சி புரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் வாழும் இருளர் இன பழங்குடி மக்களுக்கு 35 கிலோ அரிசி வழங்கியதில் கொரோனா காலத்தில் 20 கிலோ அரிசி யாக குறைத்து வழங்கியுள் ளதாக புகார் தெரிவித்துள்ளனர். உதாராணத்திற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் திருக்கண்டலம், செருக்கனூர், பங்களாமேடு, பூனி மாங்காடு, காஞ்சிப்பாடி, தாழவேடு, எஸ்.வி.ஜி புரம், தாமரைக்குளம் போன்ற கிராமங்களில் வாழும் இருளர்  இன மக்கள் ஒருநாளைக்கு ஒரு  வேலை அல்லது இரண்டு வேளை கஞ்சி தான் இன்றைக்கும் உண்டு உயிர் வாழ்கின்றனர். இச்சம்பவம் அறிந்த தும் திருவள்ளூர் மாவட்டத்தில் வாழும் 1053 பழங்குடியினர் குடும்பங்க ளுக்கு கிராம வாரியாக மதிப்புமிக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் (மற்றும்) முதன்மைச் செயலாளர், ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறைக்கு கூடுதலாக உணவுப் பொருட்களையும், நிவாரணமும் அளித்திட மனு அனுப்பியிருந்தேன்.

சமீபத்தில் பழங்குடியினர் நலத்துறை இயக்ககம், பழங்குடி யினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு  தலா 1000 ரூபாய் வீதம் வழங்கப்ப டும் என்று அறிவித்திருப்பதை வர வேற்கிறோம். இந்நலவாரியத்தின் செயல்பாடு கடந்த நான்கைந்து ஆண்டு காலமாக பெரும்பான்மை யான பழங்குடி மக்கள் புதிய நலவாரிய அட்டை பெறுவதும், உதவிகள் பெறுவதும் என்ற விழிப்புணர்வை பெரும்பான்மையான பழங்குடியினர் மத்தியில் கொண்டு செல்லவில்லை.

இதனால் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் நலவாரிய அட்டை  பெற இயலாமல் உள்ளனர். இனச் சான்று பெற்றுள்ள பழங்குடியினர் குடும்பங்களுக்கும் (நலவாரிய அட்டை இல்லாத) இக்கால நெருக் கடியான நேரத்தில், சிறப்பு நிகழ்வாக கருதி, அனைவருக்கும் அரசின் நிவா ரணம் வழங்க வேண்டும். அதே போல் பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் கடுமையான வறட்சி  நிலவுவதால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில், பழங்குடியின மக்களுக்கு குடிநீர் வழங்கவும் உரிய கொரோனா பரி சோதனை சம்மந்தப்பட்ட மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகளை நடமாடும்  மருத்துவமனை முகாம் மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பழங்குடியின மக்க ளுக்கு குடும்ப அட்டை இல்லாத குடும்பங்களுக்கு குடும்ப அட்டைக்கு 5000 ரூபாயும், 60 கிலோ அரிசி இதர உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். குடும்ப அட்டை இல்லாத பழங்குடி குடும்பத்திற்கும் ஏற்கனவே வழங்கிய ரூ.1000 மற்றும் பிற பொருட்களை இத்துடன் வழங்க வேண்டும். நல வாரிய அட்டை இல்லாத பழங்குடி குடும்பங்களுக்கு சாதி சான்று இருந்தாலே போதுமானதாக கருதி  நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் நிவாரண தொகை ரூ.1000 வழங்க வேண்டும்.

இப்பணிகளை விரைந்து செயல்  பட பழங்குடி மக்கள் பல்வேறு அமைப்புகளை இணைத்து அரசே உயர் அதிகாரிகளின் மூலமாக இதனை முழுமையாக அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறி யுள்ளனர்.