சேலம், ஜூலை 29- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து திங்களன்று (ஜூலை 29) 8 ஆயி ரத்து 400 கன அடியாக இருந்தது. கர்நாடகா மற்றும் கேரளா வில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா வில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணை களுக்கு நீர்வரத்து அதிக ரித்துள்ளது. இந்த இரு அணை களும் வேகமாக நிரம்பி வருவ தால் அணைகளின் பாதுகாப்பு கருதி 10 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப் பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக-கர்நா டக எல்லையான பிலிகுண்டு லுவை கடந்து ஒகேனக்கல் வழி யாக மேட்டூருக்கு வருகிறது. ஒகே னக்கலில் தற்போது 8 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கலுக்கு வரும் தண் ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. ஞாயிறன்று 8 ஆயி ரத்து 200 கன அடியாக இருந்த நீர்வரத்து திங்களன்று (ஜூலை 29) மேலும் அதிகரித்து 8 ஆயி ரத்து 400 கன அடியாக வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள் ளது. அணையின் நீர்மட்டம் 45.33 அடியாக இருந்தது.