tamilnadu

img

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு

மேட்டூர்:
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை வந்தடைகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.மேலும் தமிழக-கர்நாடக எல்லையான அடிபாலாறு பகுதியில் இருகரைகளை யும் தொட்டப்படி காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து மேட்டூர் அணையை நோக்கி ஓடுகிறது.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த வாரம் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து நொடிக்கு ஒன்றரை லட்சம் கன அடியாக இருந்தது. இப்போது மழைப்பொழிவு குறைந்ததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந் தது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து மொத்தமாக 78 ஆயிரம் கன அடி நீர் காவிரியாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து நொடிக்கு ஒன்றரை லட்சம் கனஅடியாக இருந்தது. கர்நாடகத்தில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப் பட்டுள்ளதால், ஒகேனக்கல் லில் நீர்வரத்து நொடிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.கர்நாடகத்தில் இருந்து ஏற்கெனவே அதிக அளவில் திறந்துவிடப்பட்ட நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 22 அடி உயர்ந்துள் ளது.அணையில் இருந்து பாசனத்துக்காக நொடிக்கு ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.