தருமபுரி:
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள அணைகளில் இருந்து நொடிக்கு 51 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 37ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.கேரளத்தின் வயநாடு, கர்நாடகத்தின் குடகு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 124 புள்ளி 8 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் 8 அடிக்குத் தண்ணீர் நிரம்பியுள்ளது.அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 48 ஆயிரத்து 955 கனஅடியாகவும், அணையில் இருந்து நீர் திறப்பு நொடிக்கு ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது. இதேபோலக் கபினி அணைக்கு நொடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், அணையின் பாதுகாப்புக் கருதி நொடிக்கு 50,000 கனஅடி நீர் ஆற்றில் திறக்கப் பட்டுள்ளது. கர்நாடகத்தில் இரு அணைகளில் இருந்தும் காவிரியில் 51 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.