சென்னை, செப்.26- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மைய அதிகாரி கூறியதாவது:- வளி மண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இரவிலோ, அதிகாலையிலோ லேசான மழை பெய்யக்கூடும். அரபிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படு கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பா லான மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. திருவண்ணாமலையில் 11 செ.மீட்டர், தருமபுரி 7 செ.மீட்டர், மயிலாடுதுறை 6 செ.மீட்டரும் மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.