tamilnadu

img

முதல்வர் மே தின வாழ்த்து

சென்னை, ஏப்.30- கடினமான உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்திடும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக் கும் ’மே தின’ நல்வாழ்த்து களை தெரிவித்துக் கொள்வ தாக முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி தெரிவித்துள் ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள ‘மே தின’ வாழ்த்துச் செய்தியில், ” உரி மைகள் மறுக்கப்பட்டு, உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமல் கால நேரமில்லா மல் பணி செய்து, கொத்தடி மைகளாய் அவதியுற்று இருந்த உழைக்கும் தொழி லாளர் வர்க்கத்தினர், பல  ஆண்டுகளாக ஒற்றுமை யுடன் போராடி தங்களின்  உரிமைகளை வென்றெடுத்த திருநாளா கவும், உடல் உழைப்பை மூலதனமாக கொண்ட உழைக்கும் மக்க ளின் உன்னதத்தை உல கிற்கு பறைசாற்றும் தினமாக வும் மே தினம் விளங்குகி றது” என்று குறிப்பிட்டுள் ்ளார்.

‘மகத்தான செயல் எது வும் கடின உழைப்பு இல்லா மல் சாதிக்க முடிவதில்லை’ என்ற சுவாமி விவேகானந் தரின் பொன்மொழியை மன தில் நிறுத்தி, மக்கள் அனை வரும் தொய்வின்றி கடின மாக உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம். உழைப்பே உயர்வு தரும், ஒளிமயமான வாழ் விற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தங்களின் கடினமான உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்திடும் அன்பிற்குரிய தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உள மார்ந்த ‘மே தின’ நல்வாழ்த்து களை தெரிவித்துக்கொள்கி றேன்” என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.