புதுதில்லி,ஆக.21- கொரோனா தொற்று பரவலால் விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரி வித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. தற்போது ஊரடங்கில் அடுத் தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் வழிகாட்டு நெறி முறைகளின்படி மும்பையில் உள்ள ஜெயின் கோவில்களை திறக்க அனு மதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மும்பையில் உள்ள தாதர், பைகுல்லா மற்றும் செம்பூரில் உள்ள ஜெயின் கோவில்களை ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மக்களின் வழிபாட்டி ற்காக திறக்க அனுமதி அளித்தது. ‘இந்த சலுகையானது வேறு எந்த கோவில்களுக்கோ, விநாயகர் சதுர்த்தி போன்ற மக்கள் அதிகம் கூடும் விழாக் களுக்கோ பொருந்தாது. விநாயகர் சதுர்த்தி போன்ற மக்கள் அதிகம் கூடும் விழாக் களுக்கு அனுமதி வழங்க முடியாது, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களில் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த இய லாது. கொரோனா சூழலில் மக்களின் பாது காப்பு விஷயத்தில் எந்த சமரசத்தையும் அனுமதிக்க முடியாது’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.