சென்னை, நவ. 29- ஒவ்வொரு பள்ளியிலும் தினமும் காலை வழிபாட்டு கூட்டத்துக்கு முன்னர் 15 நிமிடமும், மாலை 45 நிமிட மும் என ஒரு மணி நேரம் உடல் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித் துள்ளது. உடல் சார்ந்த பயிற்சி களின் மூலம் உடற்தகுதி மேம்படுவதால், கற்றலில் நல்ல மாற்றங்களை ஏற்ப டுத்திட முடியும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உடல்சார்ந்த பயிற்சிகள் பள்ளிகள் அளவில் முதலில் கொண்டுவர வேண்டியது அவசியம் ஆகிறது. அரசு, நிதி உதவி பெறும் உயர் நிலை, மேல்நிலைப்பள்ளி களில் தற்போது ஒரு வகுப்புக்கு வாரத்துக்கு 2 பாடவேளைகள் மட்டும் உடற்கல்விக்காக ஒதுக்கப் பட்டுள்ளன. மாணவ-மாணவிகளின் படிப்பின் ஒரு பகுதியாக அன்றாடம் உடல்சார்ந்த பயிற்சிகள் கொண்டுவரப்ப டும் பட்சத்தில் பாடச்சுமை யின் காரணமான மனஅழுத் தம் குறைந்து கற்றல்திறன் மேம்படும் நிலை ஏற்படும். இதன் மூலம் பள்ளி அளவி லான விளையாட்டுப் போட்டி கள், மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் பங்கேற்கக்கூடிய உடற் தகுதி மற்றும் ஆர்வம் மாண வர்களுக்கு ஏற்படும்.
ஒவ்வொரு பள்ளியிலும் தினமும் காலை வழிபாட்டு கூட்டத்துக்கு முன்னர் 15 நிமிடமும், மாலை 45 நிமிட மும் என ஒரு மணி நேரம் உடல் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும். இதனால் மாணவர்களின் உடற்தகுதி மேம்படுவதோடு, தனித் திறன், ஆளுமை மேம்பாடு, கற்றல் திறன் அதிகரிக்கும். இதை அனைத்து பள்ளி களின் தலைமை ஆசிரி யர்களும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். உடல்சார்ந்த பயிற்சிகளில் விளையாட்டு, நடனம், யோகா, உடற்பயிற்சி ஆகிய அனைத்து அம்சங்களும் இடம்பெற வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.