tamilnadu

img

கல்லூரி நிர்வாகத்துக்கு ஆணைய நீதிமன்றம் நோட்டீஸ்

மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின்கீழ் நடவடிக்கை

சென்னை, டிச.7- அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி யின் பழிவாங்கல் குறித்து மாற்றுத்திற னாளிகள் நல ஆணைய நீதிமன்றம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள் ளது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ் தீஸ்வரத்தில் உள்ளது அரசு உதவி பெறும் விவேகானந்தா கலை கல்லூரி. இங்குள்ள தனியார் நிர்வாகத்தினரின் உள்மோதல்களில் ஒருவரை ஒருவர் பழிதீர்த்துக்கொள்ள, அரசு ஊதியத்தில் நூலக உதவியாளராக பணியாற்றி வந்த ஆர்.சதீஷ்குமார் என்ற மாற்றுத்  திறனாளி உள்நோக்கத்தோடு, சம்பந்த மில்லாத காரணங்களைச் சொல்லி, சட்ட விரோதமாக பல்வேறு விதங்களில் தொந்தரவு செய்து வந்தது. அவரை கடந்த அக்-22 ஆம் தேதி பணியிடை நீக்கமும் செய்தது. பாதிக்கப்பட்டுள்ள சதீஷ்குமார் சார்பிலும், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் சார்பிலும் மாநில மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் ஜானி டாம் வர்கீஸிடம் புகார் அளிக்கப்பட்டது.  மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட் டத்தின்படி மாற்றுத்திறனாளி ஆணைய நீதிமன்றம் புகாரை ஏற்றுக்கொண்டுள் ளது. அதன்படி கல்லூரியின் செயல ருக்கு 9 அம்ச கேள்விகளை முன் வைத்து, அவை ஒவ்வொன்றுக்கும் டிச.20 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக் கும் படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விளக்கம் கோரும் கேள்விகள் விபரம் வருமாறு: 

தங்கள் கல்லூரி, மாற்றுத் திற னாளிகளுக்கான பணியிடங்களுடன் கூடிய அரசு உதவிபெறும் கல்லூரி என சொல்லப்படுகிறதே? அப்படியெனில், மாற்றுத்திறனாளிகளுக்காக எத்தனை பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள் ளன? பணி நியமன விபரங்களையும் பட்டியலிடலாம். லெட்டர்பேடில் ஏன் அரசு உதவி பெறும் கல்லூரி என குறிக் கப்படவில்லை? சதீஷ்குமார், அக்-22 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். ஆனால், அதற்கான குற்றச்சாட்டு அக்-31 ஆம் தேதிதான் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. பணி யிடை நீக்கத்திற்கு முன் எச்சரிக்கை நோட்டீஸ் ஏன் தரப்படவில்லை? சதீஷ்  குமார் விண்ணப்பித்திருந்தும், 2017 ஆம் ஆண்டு அளிக்கப்பட வேண்டிய பணி மூப்பு ஏன் அளிக்கப்படவில்லை? மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர போக்குவரத்து அலவன்ஸ் ரூ.2500 சதீஷ்குமாருக்கு ஏன் அரசு உத்தரவுப் படி முறையாக வழங்கவில்லை?

சதீஷ்குமார், முன்னதாக நியமிக்கப் பட்டிருந்த ஆய்வக உதவியாளர் பணி யில் முறைகேடு செய்துள்ளதாக உள்ள புகாரில், அவருடைய பணி விபரங்கள் மற்றும் எந்த காலத்தில் முறைகேடு நடை பெற்றது என்ற விபரத்தை குறிப்பிட வேண்டும். தங்கள் கல்லூரி நடத்தை விதிகளில் எந்த குறிப்பிட்ட நடத்தை விதியை மீறி நடந்தார் என்பதை குறிக்க வேண்டும். ஊனத்தை குறிக்கும் வகை யில் அவரை கல்லூரி அதிகாரிகள் அவ தூறு செய்துள்ளதாக உள்ள புகாரில் விளக்கம் அளிக்க வேண்டும். இதற்கு விளக்கம் அளிக்க நிர்வாகம் தவறி னால், சதீஷ்குமாரின் புகார்கள் உறுதி என முடிவெடுக்கப்படும் என நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகள் ஆணையத்துக்கு நீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் உள்ளது. அதன் படி பழிவாங்கப்பட்ட மாற்றுத்திறனாளி யின் உரிமைக்காக, ஆணையத்தின் முத லாவது தலையீடு என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் மாநில பொதுச்செயலா ளர் எஸ்.நம்புராஜன் தெரிவித்தார்.