tamilnadu

img

கூட்டணி குறித்த கருத்துக்களை பொது வெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜன.18- தி.மு.க., காங்கிரஸ் இரு  கட்சியினரும் கூட்டணி குறித்த கருத்துக்களை பொது வெளியில் தெரிவிப்  பதை கட்டாயம் தவிர்க்கு மாறு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண் டுள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கை யில் சுமுகமாகப் பேசித் தீர்த்திருக்க வேண்டிய மறை முகத் தேர்தல் இடப் பங்கீடு  குறித்து, கே.எஸ்.அழகிரி அறிக்கை மூலம் பொது வெளிக்குக் கொண்டு சென்றது இரு தரப்பிலும் விரும்பத்தகாத கருத்துப் பரி மாற்றத்திற்கு வழி வகுத்  துள்ளதாகத் தெரிவித்துள் ளார்.

தி.மு.க. - காங்கிரஸ் இடையே எந்தக் கருத்து  வேறுபாடும் கிடையாது என்றும் திமுக நிலைப்பாடு களுக்கு தமிழ்நாடு காங்கி ரஸ் கட்சி துணை நிற்கும் என்றும் கே.எஸ்.அழகிரி அறிக்கை மற்றும் பேட்டிகள் மூலம் ஆக்கபூர்வமாகத் தெரிவித்துள்ளதாகவும், அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசி உள்ளதாகவும் கூறியுள்ளார். கூட்டணி தொடர்பாக ஒரு  சில இடங்களில் இருதரப் பிற்கும் ஏற்பட்ட சில நிகழ்வு களை முன் வைத்து இரு  தரப்புமே பொது வெளியில்  விவாதம் நடத்திக் கொண்டி ருப்பது திமுக கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என ஏங்கித் தவிப்போருக்கு அசைபோடுவதற்கான செய லாக அமைவதை சிறிதும்  விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.