உதகை, ஜூன் 8- கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வாழ்வாதார பாதிப் பிற்கு உரிய நிவாரணம் வழங் கிட வேண்டுமென நீலகிரி சுற்றுலா வழகாட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இயற்கை எழில் கொஞ் சும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மட்டுமே நம்பி பல தொழில்கள் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோரும் ஏப்ரல்,மே மாதங்களில் முதல் சீசன் மற்றும் அக்டோ பர், நவம்பர் மாதங்களில் இரண்டாவது சீசனின் போது நடைபெறுகையில் ஏராள மான சுற்றுலா பயணிகள் நீல கிரி மாவட்டத்திற்கு வருவது வழக்கம். அதேபோல் அரசு விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடுவர். இந்த சுற்றுலாசீசன்க ளையும், சுற்றுலாப் பயணி களையும் நம்பியே மாவட்டத் தில்நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் வாழ்ந்து வருகின்றனர். நீலகிரியின் அனைத்து முக்கிய சுற்றுலா பகுதிக ளுக்கும் பயணிகளை அழைத்து சென்று மகிழ்விப்ப வர்கள், சுற்றுலா வழிகாட்டி கள்.
தற்போது கொரோனா ஊரடங்கால் இவர்க ளின்வாழ்கை முற்றிலும் முடங்கி வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து சுற்றுலா வழிகாட்டி கமல் கூறுகை யில், கடந்த பத்து ஆண்டுக ளுக்கும் மேலாக சுற்றுலா வழிகாட்டியாக இருந்து வரு கிறேன். மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் பதிவு செய்த வர்கள் மட்டுமே சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட முடியும். தற்போது கொ ரோனா ஊரடங்கு காரண மாக சுற்றுலா ஸ்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள்வரு வதற்கு தடைவிதிக்கப்பட் டுள்ளது. இதனால் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக வேலை இழந்து வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாமல் கஷ்டப்படுகிறோம். எங்களு டைய வாழ்கையை பாது காக்க அரசுஎந்தவொரு திட்ட மும் அறிவிக்காமலும், நிவாரணமும் வழங்கமாலும் மெளனம் காத்து வருகிறது. ஊரடங்கு தளர்வுகள் சுற்று லாவுக்கு அளிக்க இன்னும் பல மாதங்கள் கூட ஆகும் நிலைமை உள்ளது. இந்நி லையில், இந்த இக்கட்டனா சூழலில் அரசு எங்களுக்கு உதவவில்லை என்றால் பிச்சை எடுப்பதை தவிர வேறுவழி இல்லை என்று கண்ணீர் மல்க கூறினார்.