சென்னை:
கடந்த 8-ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை கொரோனா பெரும் தொற்றுக்கு பலியான பத்திரிகை யாளர்களின் எண்ணிக்கை 14 ஆகஉயர்ந்துள்ளது. அவர்களது குடும்பங்களுக்கு விரைந்து நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் (டி. யூ. ஜே.) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து டி. யூ. ஜே. மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
இளம் செய்தியாளர் பிரதீப்( தி ஹிந்து- சென்னை) கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். செவ்வாயன்று இரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவர் மறைவு பத்திரிகை உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2014 ல் தன்22 ஆம் வயதில் பத்திரிகை பணியில் இணைந்தார் பிரதீப். பாதாள சாக்கடையில் ஏற்படும் கழிவுகளை மனிதர்களே நேரடியாக இறங்கி அள்ளும் அவலத்தை தடுக்க பெரிதும் அக்கறை காட்டியவர். தமிழகத்தில் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை நாள்தோறும்அதிகரித்துவரும் நிலையில் நோய்தொற்றிற்கு காவல்துறையினர், மருத்துவர்கள், செய்தியாளர்களும் அதிகளவில் உயிரிழந்து வரு கின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த அண்டூர் பகுதியை சேர்ந்தவர் 39 வயதான நாகராஜன். இவர் தனியார் தொலைகாட்சியான ஷாலினி தொலைக்காட்சியில் குமரி மாவட்ட செய்தியாளராக பணியாற்றிவந்தார். கொரோனா நோய்தொற்றால் புதன்கிழமையன்று உயிரிழந்தார். மிகவும்ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நாகராஜனுக்கு 31வயதான நிமிஷா என்ற மனைவியும் 3 வயதான நிதின் ஆதித் என்ற மகனும் உள்ளார். சென்னை டெக்கான் கிரானிக்கல்பத்திரிகையின் மூத்த செய்தியா ளர் ஆஸ்பின். (வயது 55) என்பவரும் கொரோனாவால் செவ்வாயன்று மதுரையில் உள்ள மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இவருக்கு இரண்டு இளம் குழந்தைகள் உள்ளனர்.
சன் டிவியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் கணேச மூர்த்தியும் கொரோனாவுக்கு பலியானார் .கணேச மூர்த்திக்கு அஞ்சுகம் (வயது39) என்ற மனைவியும் வளவன் (வயது 15), பகலவன் (வயது 8) ஆகிய இருமகன்களும் உள்ளனர். இவர்களது மறைவுக்கு டி.யூ.ஜே. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த குடும்பத்தினரை காப்பாற்றும் பொருட்டு தமிழக அரசுஉடனடியாக நிதி வழங்க வேண்டும்என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.