கரூர், ஜூலை 27- தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின்(சிஐடியு) கரூர் கிளை மண்டல சிறப்பு பேரவைக் கூட்டம் கரூர் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்ட த்திற்கு கிளைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், மத்திய சங்க பொதுச்செயலாளர் கருணாநிதி, சட்ட ஆலோ சகர் மாணிக்கம் ஆகியோர் கூட்டத்தில் பேசி னர். கிளையின் புதிய தலைவராக வி.சிவ குமார், செயலாளராக ஆர்.சிறுமன்னன், பொருளாளராக எஸ்.கருப்பையா, துணைத் தலைவர்களாக எஸ்.சிவராமன், டி.சோம சுந்தரம், துணைச் செயலாளர்களாக கண்ணன், எம்.திருமுருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கொரோனா காலத்தில் போக்குவரத்து துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், எதிர்வ ரும் காலங்களில் பேருந்துகள் இயக்கப்ப ட்டால், அரசு உத்தரவுப்படி 33 சதவீதம் பயணிகளுடன் பேருந்துகளை இயக்கு வதற்கு உத்தரவாதப்படுத்த வேண்டும். வெளியே சென்று பணிமணைகளுக்கு திரும்பும் பேருந்துகளுக்கு கிருமிநாசினி அடித்து சுத்தம் செய்ய வேண்டும். பணிம னைகளில் பேருந்துகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், கொரோனா ஊரடங்கால் வாழ்க்கை நடத்த வருமானமின்றி சிர மத்தில் உள்ளனர். எனவே போக்குவரத்து கழக நிர்வாகம், இந்த தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொ கையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.