சென்னை, மே 31 - மக்கள் நலன் கருதி பேருந்துகள் தடம் இழப்பு இன்றி இயக்க தரமான உதிரி பாகங்களை வாங்கி தர வேண்டுமென்று தொழி லாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் 56வது ஆண்டு பேரவை மே 29-30 தேதிகளில் எம்ஜிஆர் நகரில் நடைபெற்றது. இந்தப் பேரவையில், போக்குவரத்து கழகங்க ளுக்கு வரவுக்கும் செலவுக்கு மான வித்தியாசத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். 2021 மே மாதத்திற்கு பிறகு இறந்த தொழிலாளர்களின் வாரிசு கள் மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு சேர வேண்டிய பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். தொழி லாளர்களுக்கு சாதகமான தீர்ப்புகளை கால தாமத மின்றி செயல்படுத்த வேண்டும்,பேருந்து தானியங்கி கதவுகளை நல்ல முறையில் பரா மரிக்க வேண்டும். காலதா மதத்தை காரணம் காட்டி பேருந்துகளை இயக்க மறுப்பது, ஊழியர்களுக்கு சொந்த விடுப்பு கொடுப் பதை கைவிட வேண்டும், பணி ஓய்வு வயதை 60லிருந்து 58 ஆக குறைக்க வேண்டும், பேருந்துகளின் வயது வரம்பை உயர்த்தி வெளியிடப்பட்ட அரசா ணையை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமை தாங்கினார். துணைப்பொதுச் செயலா ளர் என்.சிவா வரவேற்றார். துணைத் தலைவர் எஸ்.பக்தவச்சலு கொடி யேற்றினார். சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகு மாறன் மாநாட்டை தொடங்கி வைத்து உரை யாற்றினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தயானந்தம் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் ஏ.ஆர்.பாலாஜி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்தி ரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் நீல மேகம், செயலாளர் கு.வீரராகவன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செய லாளர் கே.ஆறுமுகநயினார் நிறைவுரையாற்றினார். இணைச் செயலாளர் கே. அன்பழகன் நன்றி கூறினார்.
புதிய நிர்வாகிகள்
சங்கத்தின் தலைவராக ஆர்.துரை, பொதுச்செய லாளராக வி.தயானந்தம், பொருளாளராக ஏ.ஆர்.பாலாஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.