tamilnadu

உதகையில் கொள்ளையர்கள் கைது

உதகை, ஆக. 30 - நீலகிரி மாவட்டம், குன் னூர் கீழ் அட்டடி பகுதியில் வசித்து வருபவர் ரோகித். இவரது வீட்டில் சனியன்று இரவு சுமார் 11 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் திருட முயற்சி செய்துள்ளனர். இதனையறிந்த ரோகித் உட னடியாக காவல் நிலையத் திற்கு தகவல் கொடுத்துள் ளார். இத்தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்தனர். இதனை யறிந்த அக்கும்பல் தப்பிக்க முயன்றபோது அவர்களை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர்.

இதன்பின் மேற் கொண்ட விசாரணையில், அவர்கள் வடமாநில இளை ஞர்கள் என்பதும் மொத்தம் ஏழுபேரில் மூவர் தப்பி ஓடி விட்டதாகவும் விசாரணை யில் தெரியவந்தது. இது குறித்து குன்னூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.