உதகை, நவ. 14- நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி துவங்கிட முயற்சி எடுத்த நாடா ளுமன்ற உறுப்பினர் ஆ.இராசாவுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி உதகையில் உள்ள ஆனந்தகிரி அரங்கில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் மு.முபாரக் தலைமை வகித்தார். இதில் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேசன், கூட லூர் சட்டமன்ற உறுப்பினர் மு.திராவிட மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், செயற்குழு உறுப்பினர்கள் ஜெ.ஆல்துரை, எல்.சங்கர லிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெள்ளி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சகாதேவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஏற்புரையாற்றினார்.