உடுமலை, செப்.26- நீதிமன்றத்தையும், ஆட்சிய ரையும் ஏமாற்றி ஊழலுக்கு துணை போகும் குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து வாலிபர், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடிமங்கலம் ஒன்றியம், விரு கல்பட்டி ஊராட்சியில் செயலாளராக இருந்த பாலமுரு கன், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டதில் பல லட்சம் ரூபாய் முறை கேடுகள் செய்ததாக வாலிபர் சங்கத்தின் சார்பில் புகார் அளிக் கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தால் கடந்த 8.11.2016 -யில் விருகல்பட்டியில் நடைபெற்ற சமூக தணிக்கையில் பெரியளவில் முறைகேடுகள் நடை பெற்றது உண்மை என உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் ஊராட்சி செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலை யில், முதலமைச்சர் தனி பிரிவு உள்ளிட்ட சம்மந்தபட்ட அனைத்து அரசு துறைகளுக்கும் வாலிபர் சங்கத்தின் சார்பில் புகார் கடிதம் அனுப்பப்பட்டது. இதனால் ஆத் திரமடைந்த ஊராட்சி செயலாளர் பாலமுருகன், வாலிபர் சங்க தோழர் களுக்கு மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாகவும் குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளிக் கப்பட்டது. மேலும், இதன்பின்னர் காவல் துறை அனுமதியுடன் கடந்த 23.11.2016 ஆம் தேதியன்று வாலி பர் சங்கம் மற்றும் விவசாய தொழி லாளர் சங்கத்தின் சார்பில் விரு கல்பட்டி ஊராட்சி வி.வல்லகுண்டா புரம் பகுதியில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அப்போது, இந்த ஆர்ப்பாட்டத்தை சீர் குலைக்கும் வகையில், ஊராட்சி செயலாளர் பாலமுருகன் தூண்டு தலால் சமூக விரோதிகள் ஆர்ப் பாட்டத்தில் புகுந்து தகராறு செய்தனர். இதுகுறித்து குடி மங்கலம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், ஆர்ப் பாட்டத்தில் தகராறு செயதவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஊராட்சி செயலாளர் பாலமுருகன் தரப்பினர் அளித்த பொய்ப் புகா ரின் அடிப்படையில் வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆறு பேர் மீது உண்மைக்கு புறம்பாக வன் கொடுமை தடுப்பு சட்டதின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, ஊராட்சியில் நடைபெற்ற முறைகேடு தொடர் பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னர் வெ.ரங்கநாதன் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த 2017ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஊராட்சி செய லாளர் பாலமுருகன் இரு மாதங் களுக்கு முன்பு பணி நீக்கம் செய் யப்பட்டதாக ஊராட்சி நிர்வா கத்தின் சார்பில் நீதிமன்றத் தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊராட்சி துறையில் பணி நீக்கம் செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு மட்டுமே உள்ள நிலையில் ஊராட்சி நிர் வாகத்தின் தரப்பில் நீதிமன்றத் தில் தவறான தகவல் தரப்பட்டுள் ளது. இதையடுத்து இதுதொடர் பான கண்டன தட்டி போர்டு ஊராட்சி அலுவலகத்தின் முன்பு சில தினங்களுக்கு முன்பு வாலி பர் மற்றும் விவசாய தொழிலா ளர் சங்கத்தின் சார்பில் வைக்கப் பட்ட நிலையில், அதனை சிலர் திட்டமிட்டு அகற்றியுள்ளனர். இதையடுத்து ஊழல் செய்த ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்தாக நீதிமன்றத்தை யும், மாவட்ட ஆட்சியரையும் ஏமாற்றிய வட்டார வளர்ச்சி அலு வலரை பணி நீக்கம் செய்ய வேண்டும். ஊரக வேலைத்திட்டத் தில் நடைபெற்ற ஊழல் தொடர் பாக முறையாக விசாரணையை நடத்த வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று விவசாய தொழிலாளர் சங்கம் மற் றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பெதப்பம்பட்டி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலி பர் சங்கத்தின் குடிமங்கலம் ஒன் றிய செயலாளர் ஓம்பிரகாஷ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் என். சசிகலா, வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணிகண்டன், விவசாய தொழி லாளர் சங்கத்தின் நிர்வாகிகள் வெ.ரங்கநாதன், தம்புராஜ் விவ சாய சங்கத்தின் நிர்வாகிகள் ஸ்ரீதர், சுந்தர்ராஜ் உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டனர்.