உதகை, அக்.17- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடலூா் நகராட்சி ஊழியா்களுக்கு சீருடைகள், பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் பணிபுரியும் ஓட்டுநா்கள், ஊழியா்கள், பொது சுகா தாரப் பணியாளா்களுக்கு சீருடைகள், மழைக் கோட்டு, காலணிகள், பண்டிகை முன் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) நாராயணன், மேலாளா் நாகராஜ், சுகாதார ஆய்வாளா் சிவகுமார் உள்ளிட்ட அலு வலா்கள் கலந்து கொண்டனா்.