புதுக்கோட்டை, பிப்.24- திருமண விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பரிசுப் பொருட்க ளாக புத்தகங்களை அளிக்கும் வழக்கம் வளர வேண்டும் என்றார் இயக்குனர் ஆர்.பாண்டிராஜ். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் அவர் பேசியது: பல நூல்களை கற்றறிந்தவர்களே வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக வும், சாதனையாளர்களாகவும் இருக் கின்றனர். நம்முடைய கரடுமுரடான பழக்கவழக்கங்களை புத்தகம்தான் மாற்றி அமைத்து இருக்கின்றன. பள்ளிக் காலங்களில் நானும் அப்படித்தான் திரிந்தேன். சென்னையில் சினிமா துறைக்குள் நுழைந்தபிறகு புத்தகத்தின் அருமை எனக்கு புலப்பட்டது. சினிமாத் துறையில் சாதித்தவர்கள் பலநூல்க ளை கற்றுத்தேர்ந்தவர்களாக இருந்த னர். அவர்களைப் பார்த்துதான் நானும் வாசிக்கும் பழக்கத்தை கற்றுக்கொண் டேன். பூங்கொத்து கொடுப்பதைவிட புத்த கங்களைக் கொடுத்து காதலித்தால் அது சிறப்பான காதலாக இருக்கும். திருமண வீடுகளில் நினைவுப்பரிசாக புத்தகங்க ளை கொடுக்கும் பழக்கம் பரவ வேண்டும். சமீபத்தில் நான் வாசித்த புத்தகங்களில் மிகவும் கவர்ந்தது சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி. அந்தப் புத்தகத் நான் வெறிகொண்டு படித்ததைப் பார்த்து என் மனைவி ஆச்சரியமாகக் கேட்டார். அவரிடம் புத்தகம் குறித்து நான் கூறிய தகவலை அடுத்து அவரும் என்னைப் போலவே நேரம் காலம் பார்க்காமல் அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தார். இதுவரை 10-க்கும் மேற்பட்ட திருமண விழாக்களில் வேள்பாரி புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளேன். எனது சொந்த மண்ணான புதுக் கோட்டையில் இதுபோன்ற புத்தக விழாக்களை நடத்துவதைப் பார்த்து பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விழாக்கள் வருடம்தோறும் நடைபெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பி னர் சு.திருநாவுக்கரசர் பேசுகையில், புத்த கங்கள் எப்போதும் நல்ல நண்பராக, ஆலோசகராக, ஒரு குருவாக, ஒரு ஆசானாக, ஒரு தாயாக, ஒரு தந்தையாக இருந்து நம்மை வழிநடத்தும். பல விழாக்கள் எப்போதும் எங்கேயும் நடந்து கொண்டே இருந்தாலும் கூட, புத்தகத் திருவிழாக்கள்ஒரு கிரீடத்தில் வைக்கப்பட்ட வைரத்தைப் போலதான் நடக்கின்றன என்றார்.