நீலகிரி, ஜூன் 6- நீலகிரி மாவட்டத்தில் நான்கு புதிய 108 அவசர கால ஊர்திகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத் தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா தெரிவித்ததாவது, நீலகிரி மாவட் டத்தில் மலைப்பகுதி அதிகமுள்ள பலப்பகுதி களுக்கு 108 அவசர கால சேவையின் மூலம் உறுதி யளிக்கப்பட்ட மருத்துவ சேவையினை மலைவாழ் மக்களுக்கு அளித்து வருகின்றது.
இதன்மூலம் பொது மக்களிடமிருந்து முதலுதவி சிகிச்சை வேண்டி விடுக்கப்படும் அழைப்புகளுக்கு உடனடி மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகின்றது. இச்சேவையில் 120 ஓட்டுநர்களும், 120 அவசரகால மருத்துவ உதவி யாளர்களும் சுழற்சி முறையில் பணியாற்றி வரு கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் 108 அவசர சிகிச்சை சேவை வேண்டி நாளொன்றுக்கு 250 முதல் 300 அழைப்புகள் வரப்பெறுகின்றது. அவ்வாறு வரும் அழைப்புகளுக்கு ஒன்றுக்கூட விடுபடாமல் சேவை வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆறுமாதங்களில் பழங்குடியின மக்களில் சுமார் 18 பிரசவங்கள் 108 அவசர கால ஊர்தியிலேயே நடைபெற்று தாய் மற் றும் சேய் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பன போன்ற பணிகளே இச்சேவைகளுக்கு சான்றாக விளங்கு கின்றது. இதன் மூலம் இச்சேவையினை இன்னும் விரைவாகவும் அனைத்து தரப்பு மக்களும் விரைந்து வழங்கும் வகையிலும் செயல்பட இயலும்.
இவ் வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பாலுசாமி உட்பட அரசுத்துறை அலுவலர் கள் பலர் உடனிருந்தனர்.