tamilnadu

img

சுற்றுலா வழிகாட்டிகளுக்கு கடன் வழங்க மறுக்கும் கூட்டுறவு வங்கி மாவட்ட ஆட்சியர் தலையிடக் கோரிக்கை

உதகை, ஜூலை 27 - நீலகிரி மாவட்ட சுற்றுலா வழி காட்டிகளுக்கு வங்கியில் கடன் கொடுக்க மறுப்பதாகக் கூறி சுற்றுலா வழிகாட்டி சங்கத்தினர் ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் அனை வருமே சுற்றுலாப் பயணிகளை மட்டும் நம்பி வாழ்க்கையை நடத்தி வருபவர் கள். இந்நிலையில், தற்போது கொரோனா நோய்த்தொற்று காரண மாக நீலகிரி மாவட்டத்திற்கு எந்த சுற் றுலாப் பயணிகளும் வருவதில்லை. இதனால் வேலையின்றி, வருமான மின்றி வாழ்வாதாரமே கேள்விக்குறி யாகும் நிலைமைக்கு தள்ளப்பட்டி ருக்கிறோம். இந்நிலையில், சுற்றுலாத் துறை யைச் சார்ந்தவர்கள் வங்கியில் கடனு தவி பெற்று வாழ்வாதாரத்தை மேம் படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். அதனடிப் படையில், நீலகிரி மாவட்ட கூட்டுறவு வங்கியின் மார்க்கெட் கிளையில் தக்க ஆவணங்களுடன் கடன் கேட்டு விண் ணப்பித்து இருந்தோம். ஆனால், வங்கி அதிகாரிகள் கடன் தர மறுத்து அலைக்கழிக்கின்றனர். இதனால் மேலும், மன உளைச்சலுக்கு ஆளா கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களின் வாழ்வாதாரத்தைப் பாது காப்பதற்காக வங்கியில் கடன் பெறுவ தற்கு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சரிசெய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் குறிப் பிடப்பட்டுள்ளது.