உதகை, அக்.22- நிலுவையிலுள்ள 9 மாத மாக சம்பளம் கிடைத்திட சம்பந்தப் பட்ட துறை அமைச்சர் மற்றும் அதி காரிகளிடம் எடுத்துரைக்க வலியு றுத்தி உதகையில் டி.கே.ரங்க ராஜன் எம்.பி.யிடம் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் மனு அளித்தனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு கடந்த 9 மாதமாக சம் பளம் வழங்கப்படவில்லை. இத னால் ஒப்பந்த தொழிலாளர்கள் மிக வும் துயரத்திற்கு ஆளாகி உள்ளது டன், அவர்களின் குடும்பத்தார் வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட் டுள்ளனர். மேலும், ஒப்பந்த தொழி லாளர்கள் தங்களது குழந்தைக ளுக்கான கல்வி கட்டணங்களை கூட செலுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு அவர்களது கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் தற்போது இன்னும் ஒரிரு தினங்களில் தீபாவளி பண் டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அத்தொழிலாளர்கள் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் உதகையில் உள்ள ஒய்பிஏ அரங்கத்தில் நடை பெற்ற இந்திய கம்யூனிஸ்டு இயக் கத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் உதகைக்கு வந்திருந் தார். அப்போது அவரை பிஎஸ் என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் சந்தித்து, தங்களுக்கு கடந்த 9 மாத காலமாக வழங்கப்படாத நிலுவையிலுள்ள சம்பளம் கிடைத்திட சிஎம்டி, தொலைத்தொடர்பு அமைச்சர் உள்ளிட்டோரிடம் பரிந்துரை செய் திட வேண்டுமாறு கோரிக்கை மனு அளித்தனர். இதனை பெற்றுக்கொண்ட டி.கே.ரங்கராஜன் எம்.பி., ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை களை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் மற்றும் அதி காரிகளிடம் வலியுறுத்துவதாக உறுதியளித்தார். முன்னதாக, இம் மனுவினை அளிக்கையில் தமிழ் நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் சி.வினோத், மாவட்ட செயலாளர் பி.விஜயகுமரன், பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் ஜேக்கப் மோரிஸ், பிஎஸ் என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.சதாசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.