கடலூர்,ஏப்.29- மழையில் நனைந்த நெல் மூட்டைகளையும் கொள் முதல் செய்ய வேண்டும். தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கோ. மாத வன் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் சமீ பத்தில் பெய்த கோடை மழையால் அறுவடை செய்த நெல் மழை யில் நனைந்து உள்ளது. ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்க ளுக்கு எடுத்துச் சென்ற நெல் மூட்டைகள். நெல் கொள் முதல் நிலையங்களுக்கு எடுத்துச் சென்று வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையால் நனைந்து உள்ளது.
குறிஞ்சிப்பாடி, விருத்தாச லம், திட்டக்குடி பகுதியில் சுமார் பத்தாயிரம் முட்டைகள் ஈரமாய் உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் அதிக மாக உள்ளதால் விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை கொள் முதல் செய்ய மறுத்து வருவ தாக தெரிகிறது. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விவசாயி களை காப்பாற்ற அரசின் விதி களில் மாற்றங்களை உருவாக்கி அதிகம் ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்து விவசாயி களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கும் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.