tamilnadu

img

திடீர் மழையால் நாசமான நெல் மூட்டைகள்

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

அரசு நேரடி கொள் முதல் நிலை யங்களில் தேங்கிக் கிடக்கும்  நெல் மூட்டைகள் திடீரென பெய்த மழையில் நனைந்து நாசமாகிய தால் செய்வதறியாமல் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் அறுவடை செய்யும்  நெல் மூட்டைகளை விவசாயிகளிட மிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்ய காஞ்சிபுரம் மாவட்டத்தில் 36  இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 39 இடங்களிலும் நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலமாக அரசு சார்பில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கொள்முதல் நிலையங்களில் இது வரைக்கும் 40 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து தொடர்ந்து நெல் மூட்டைகள் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு வந்து  கொண்டே இருக்கிறது. ஆனால், இரண்டு மாவட்ட நேரடி கொள்முதல் நிலையங்களிலும் உடனுக்குடன் கொள்முதல் செய்வதற்கான போதிய ஏற்பாடுகள் இல்லை. இதனால் விவ சாயிகள் தாங்கள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக் கழகக் அலுவலகங்களிலும் அலுவலகத்திற்கு வெளியில் சாலை களிலும் குவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரக்  காலமாக கொள்முதல் நிறுத்தப் பட்டுள்ளது. இந்த நாள் ஆயிரக்க ணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. நெல் மூட்டைகளைப் பாதுகாக்க எவ்வித ஏற்பாடுகளும் செய்துதரப்படவில்லை. வெயிலில் காய்ந்து கொண்டிருந்த நெல் மூட்டைகள், ஞாயிற்றுக்கிழமை அதி காலையில் திடீரென பெய்த மழை யால் நனைந்து நாசமாகிவிட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பர வலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில  அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கு  உத்தரவால் ஏற்கனவே பாதிக்கப் பட்ட விவசாயிகள் இப்போது என்ன  செய்வதென்று தெரியாமல் நிற்கதி யாய் நிற்கிறார்கள். இது குறித்து மது ராந்தகம் அடுத்த முதுகரை நெல்கொள் முதல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி வேலுவிடம் கேட்டபோது,” இந்த கொள்முதல் நிலையத்திற்கு நூறு மூட்டை நெல் மூட்டைகளைக் கொண்டு வந்தேன். இன்று கொள்முதல் செய்வார்கள் நாளை கொள்முதல் செய்வார்கள் என்று காத்திருந்தேன். ஒன்றரை மாத மாகியும்  கொள்முதல் செய்யவில்லை.  சாலையோரத்தில் அடுக்கி வைத்தி ருந்த அனைத்து முட்டைகளும் மழை யில் நனைந்து நாசமாகிவிட்டது” என்று  வேதனை தெரிவித்தார்.

“நெல் மூட்டைகளைக் கொண்டு வந்தபோதே கொள்முதல் செய்ய மாட்டோம் என்று அதிகாரிகள் கூறி யிருந்தால் தனியாரிடம் விற்பனை செய்திருந்தாலும் பாதிக்கு பாதியா வது கிடைத்திருக்கும்.  நெல் மூட்டை கள் அனைத்தும் மழையால் வீணாகப்  போனதால் முதலுக்கே மோசமாகி விட்டது. இப்போதும் தனியார் வியா பாரிகளிடம் கேட்டால் அடிமாட்டு விலையை விட மிகவும் மோசமாகக் கேட்கிறார்கள்’’ என்றும் கண்ணீர் வடித்தார்.

விவசாயி கதிர்,  “நாங்கள் நெல்லை  கொண்டு வந்து காத்துக் கிடந்தது தான் மிச்சம். எங்களிடம் நெல்லை கொள்முதல் செய்யாமல் தனியார் வியாபாரிகள் கொண்டுவரும் நெல்  மூட்டைகளைக் கொள்முதல் செய்த தால் விவசாயிகள் அனைவரும் மோசம் போய் விட்டு விட்டோம்” என்றார்.

கடந்த ஒரு மாத காலமாக நெல்  மூட்டைகளைக் கொள் முதல் செய்வ தற்குத் தேவையான கோணிப் பைகள்  இல்லாமல் நேரடி கொள்முதல் நிலை யங்களில் நெல் மூட்டைகள் தேக்க மடைந்தன. விவசாயிகள் பாதிப்ப தால்  உடனடியாக கோணிப் பைகளை வாங்கி விவசாயிகளிடமிருந்து  உட னடியாக கொள்முதல் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்  கே.நேரு பல முறை முறையிட்டார். இதற்கு பிறகும் எந்தவித நடவடிக்கை யும் எடுக்காமல் வேடிக்கை பார்த்த  மாவட்ட நிர்வாகம், அரசு அலுவலர்க ளைப் பணி செய்ய விடாமல் தடுத்த தாக நேரு மீது உண்மைக்கு மாறாகக்  காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்தது.

கடந்த மாதம் பெய்த கோடை மழை யின் போதும் இதே போன்று நெல்  மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்தது. அப்போதே துரிதமாக விவ சாயிகளிடமிருந்து நெல் மூட்டை களைக் கொள்முதல் செய்திருந்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையிலிருந்ததாவது நெல் மூட்டைகளைப் பாதுகாத்திருக்க முடியும். அரசின் மெத்தனப் போக்கால்  தற்போது விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

-க.பார்த்திபன்