தில்லி
உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 7 மாத காலம் ஓய்வின்றி மக்களை பாடாய் படுத்தி வருகிறது. தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா நோயாளிகளாக மருத்துவமனைக்கு செல்கின்றனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி வருகின்றனர். பலர் பசி பட்டினிக்கு கடும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். சிலர் இயல்பு நிலையை மறந்து போன போக்கில் வாழ்கை வண்டியை நகர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் உலகின் கொரோனா பலி எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதுவரை 8.96 லட்சம் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 1.93 லட்சம் பேரும், பிரேசிலில் 1.27 லட்சம் பேரும், இந்தியாவில் 72 ஆயிரம் பேரும், மெக்ஸிகோவில் 67 ஆயிரம் பேரும் பலியாகியுள்ளனர். மற்ற நாடுகளில் கொரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்துக்குள் உள்ளது.
உலகில் பல நோயாளிகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், இன்று இரவுக்குள் உலகின் பலி எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கும் என சூழல் உருவாகியுள்ளது.