tamilnadu

img

ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து

துபாய்:

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபாயில் ’பெஹல் இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் இந்தியாவை சேர்ந்த ஜோகிந்தர் சிங் சலாரியா தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.


மேலும் பி.சி.டி. மனிதநேய அறக்கட்டளை மூலம் பல நாடுகளில் சமூகச் சேவைகளை செய்து வரும் ஜோகிந்தர் சிங் பிறப்பில் இந்துவாக இருந்தாலும் ஆண்டுதோறும் ரம்ஜான் நோன்பு காலங்களில் நோன்பாளிகள் எண்ணிக்கை பாராமல் இப்தார் விருந்து அளித்து உபசரிப்பு அளிப்பது வழக்கம். நடப்பாண்டில் சற்று வித்தியாசமாக அபுதாபி நகர சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு 7 வகை சைவ உணவுகளை வைத்து நோன்பாளிகளுக்கு ‘இப்தார்’ விருந்து அளித்தார்.


ஜோகிந்தர் சிங்கின் புதிய முயற்சி "உலகின் மிக நீளமான பசியாற்றும் நிவாரணம்" என்ற தலைப்பில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.