tamilnadu

img

கொரோனா வைரஸ் எதிரொலி : நடுக்கடலில் நிற்கும் 2 சொகுசு கப்பல் 

டோக்கியோ 
ஆசியக்கண்டத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அதன் பிறப்பிடமான சீனாவில் 650-க்கும் மேற்பட்டோரை காவி வாங்கியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதால் அங்கு ராணுவம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் ஆசியக்கண்டத்தை சேர்ந்த பெரும்பாலான நாடுகள் கடும் அச்சத்தில் உள்ள நிலையில், சீனாவிலிருந்து சென்று திரும்பிய டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலை ஜப்பானும் மற்றும் தைவானிலிருந்து திரும்பிய வேர்ல்ட் டிரிம் சொகுசு கப்பலை ஹாங்காங்கும் நடுக்கடலில் நிறுத்தி வைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்றான கார்னிவல் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வரும் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் ஒரு சீனப்பயணிக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவர டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 1,045 மாலுமிகள், 2,666 பயணிகள் என மொத்தம் 3711 பேர் யோகோஹாமா கடற்பகுதியில் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் 73 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 61 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 21 பேர் ஜப்பானியர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. 

இதே போல தைவானில் இருந்து ஹாங்காங்கின் கோய் டாக் பகுதிக்கு வந்த வேர்ல்ட் டிரிம் சொகுசு கப்பல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டது. கப்பலில் இருந்தவர்களிடம் பரிசோதனை செய்த பொழுது 8 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு கப்பலில் உள்ள அனைவருக்கும் முழு பரிசோதனை முடிந்த பின்னரே இந்த கப்பல் சொந்த இடத்திற்கு திரும்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.