tamilnadu

img

கொரோனா பாதிப்பு... சீனாவை மிஞ்சியது ஈரான்  

டெஹ்ரான் 
உலகளவில் கொரோனா எழுச்சி பெற்ற பொழுது சீனாவுக்கு அடுத்த இடத்திலிருந்த ஈரான் மார்ச் மாதத்தில் கொரோனவை ஓரளவு கட்டுப்படுத்தியது. ஏப்ரல் மாத 2-வது வாரத்தில் கொரோனா பாதிப்பு சற்று தீவிரமடைந்த நிலையில், கடந்த ஒரு நேரகாலமாக அங்கு ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் 1200க்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 91 பேர் பலியாகியுள்ளனர். ஈரானில் மொத்த பாதிப்பு 84 ஆயிரத்து 505 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பலி எண்ணிக்கை 5 ஆயிரத்து 205 ஆக உள்ளது. எனினும் ஆறுதல் செய்தியாக 59 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் முன்னேற்றம் கண்டு வீடு திரும்பியுள்ளனர். முக்கியமாக கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்குத்தள்ளி ஈரான் அதிக சேதாரத்தைச் சந்தித்து வருகிறது.   

சீனா 
பாதிப்பு : 82 ஆயிரத்து 747 
பலி  : 4 ஆயிரத்து 632
மீண்டவர்கள் : 77 ஆயிரத்து 84