பதவியேற்பு விழாவில் கோத்தபய பேச்சு
கொழும்பு, நவ.19- அனுராதபுரம் ருவன்வெலி மகா சாய பௌத்த விகாரை யில் திங்கள்கிழமை நடந்த விழாவில் ஜனாதிபதியாக பதவி யேற்றவுடன் கோத்தபய தமது உரையில்,தமிழர்களின் வாக்கு களையும் தான் எதிர்பார்த்த போதிலும், தான் எதிர்பார்த்தளவு தமிழர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்று கூறிய அவர் இனிவரும் காலங்களிலாவது தன்னுடன் இணைந்து செயல்பட முன்வருமாறு தமிழர்களுக்கு கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்தார். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தனது முதலா வது திட்டம் எனவும் அவர் கூறினார்.சட்டத்தின் ஆட்சியை மதிக்கிற, லஞ்ச ஊழல் அற்ற ஆட்சி ஒன்றை ஏற்படுத்துவ தாகவும் அவர் உறுதியளித்தார். அத்துடன் தன்னுடன் இணைந்து செயல்பட முன்வருமாறு வெளிநாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கையில் ஜனாதிபதியாக கோத்தபய ராஜபட்ச பதவியேற்றுள்ள நிலையில், ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சி பெரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இதையடுத்து எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய மூன்று விஷயங்கள் தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெளிவு படுத்தியுள்ளார். 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தேதி நாடாளு மன்றத்தை கலைத்து, ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றை அரசியலமைப்பின் பிரகாரம் நடத்த முடியும். நாடாளு மன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக மூன்றில் இரண்டு பெரும் பான்மையை வழங்கி, நாடாளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த சந்தர்ப்பத்தை வழங்க முடியும். பிரதமர் தலைமையிலான அரசாங்கம் சுய விருப்பின் பேரில் விலகி, பொதுத் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் வரை இடைக்கால அமைச்சரவையொன்றை நடத்தி செல்ல ஜனாதி பதிக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். இந்த விஷயங்கள் குறித்து ஆராய்ந்து இந்த வாரத்திற்குள் கட்சித் தலைவர் கள் கூட்டத்தை கூட்டி தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என சபாநாயகர் கூறியுள்ளார்.