புதுதில்லி:
பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும், இந்துத்வா கருத்துகளுக்கும் எதிராக, சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் தங்களின் கருத்துகளை தெரிவிக்கும்போது, அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத, பாஜக - ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா கும்பலைச் சேர்ந்தவர்கள், நாங்களும் டுவிட்டரில் கருத்து தெரிவிப்போம் என்றுகளத்தில் குதிப்பார்கள். ஆனால், போலியான செய்திகளையும், போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டு, தவறைக் கூடசரியாக செய்யத் தெரியாமல் மாட்டிக் கொண்டு அசிங்கப்படுவார்கள். ஆனாலும் அவர்கள் திருந்துவது இல்லை. அவர்களின் வாடிக்கையாகவே அது மாறிவிட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு மிஸ்டு கால் கொடுத்து பாஜகவில் உறுப்பினராக சேரலாம் என்று அறிவித்தார்கள். அதன்படி தமிழ்நாட்டில் மட்டும் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் மிஸ்டுகால் கொடுத்து பாஜக-வில் சேர்ந்து விட்டதாகவும் கூறினார்கள். ஆனால், வட்டியில்லா கடன் கிடைக்க- 1800 266 2020 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டுகால் கொடுத்தால் போதும் என்று ஒரு போஸ்டரை ஒட்டி, அதே எண்ணையே பாஜகவில் சேர்வதற்கும் அழைக்கச் சொல்லியிருந்தது, பின்னாளில் அம்பலமானது.
கடந்தாண்டு, பாஜகவிற்கு எதிராககருத்துத் தெரிவித்ததாக கூறி, ஸ்னாப்சாட்(Snapchat) நிறுவனத்தை விமர்சிப்பதற்குப் பதில், ஸ்னாப்டீல் (Snapdeal) நிறுவனத்தை விமர்சித்தார்கள். அத்துடன் அந்த நிறுவனத்திற்கு குறைந்த மதிப் பைக் (1 star rating) கொடுத்து மொபைல்செயலியையும் நீக்கம் (Uninstall) செய்தார்கள்.அதையடுத்து, ‘சர்ப் எக்ஸெல்’ (SurfExcel) வெளியிட்ட மதச்சார்பற்ற விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்றபெயரில் Surf Excel-க்கு பதிலாக ‘மைக்ரோசாப்ட் எக்ஸெல்’ (MicrosoftExcel)-க்கு 1star ரேட்டிங் (மதிப்பிறக்கம்) கொடுத்தார்கள்.அதைவிட பெரிய வேடிக்கையாக, தீபிகா படுகோனே நடித்த ‘பத்மாவதி’ (Padmaavat) படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு பதிலாக, அனுஷ்காவின் ‘பாகமதி’ (Bhaagamathid) படம் வெளியான திரையரங்கிற்குச் சென்று ரகளையில் ஈடுபட்டனர். இந்நிலையில்தான், தற்போது குடியுரிமை சட்ட விவகாரத்திலும், சிஏஏ (CAA)என்று ஹேஷ்டேக் உருவாக்குவதற்குப் பதிலாக சிசிஏ (CCA) என்று டிரெண்ட் செய்து, அவமானப்பட்டுள்ளனர்.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகவும், மோடி அரசுக்கு எதிராகவும் ட்விட்டரில் தினமும் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வரும் நிலையில், ஆத்திரமடைந்த பாஜகவினர் ‘நீங்கள் எதிர்ப்பு தெரிவித்தால், நாங்கள் ஆதரவு தெரிவிப்போம்’ என்று கூறி, #IndiaSupportsCCA (இந்தியாசிசிஏ-வை ஆதரிக்கிறது) என்று ஒரு ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர்.குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்பதற்கு #IndiaSupportsCAA என்றுதான் போடப் பட்டிருக்க வேண்டும். பாஜகவினரோ, #IndiaSupportsCCA என்ற ‘A’ என்ற எழுத்திற்குப் பதிலாக கூடுதலாக ஒரு ‘C’-யைப் போட்டு, அந்த ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்துள்ளனர்.
பாஜக தகவல்தொழில்நுட்ப அணி பரப்பிய இந்த ஹேஷ்டேக்கை, எழுத்துப் பிழையைக் கூட சரிபார்க்காமல், எச்.ராஜா போன்ற ‘அதிமேதாவி’ தலைவர்கள்உட்பட பாஜகவினர் அத்தனை பேரும், ‘சிசிஏ’ என்றே எழுத்துப்பிழையுடன் டிரெண்ட்செய்துள்ளனர்.குடியுரிமைத் திருத்தச் சட்டம் வேண்டாம் என்று No to CAA; No to NRCஉணர்வோடு கருத்து தெரிவிப்பவர் களுக்கு மத்தியில், நாங்களும் டிரெண்ட்செய்கிறோம் பாருங்கள் என்று பாஜகவினர் தப்பும் தவறுமாக, டுவிட்டரில் டிரெண்ட் செய்து, தற்போது உலக அளவில் அசிங்கப்பட்டுள்ளனர். பாஜகவினரைப் பார்த்து, டுவிட்டர் உலகமே சிரிப் பாய் சிரித்துக் கொண்டிருக்கிறது.