புதுதில்லி:
முந்நூறுக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள், அவர்கள் இஷ்டத்திற்கு தொழிலாளர்களை எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு பேர்களை வேண்டுமானாலும் வேலையை விட்டு அனுப்பும் வகையில், தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் மத்தியபாஜக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.அதாவது, முந்நூறுக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் ஊதியம் இல்லாவிடுப்பு (Lay Off) அளிப்பதற்கு இனிஅரசின் அனுமதி பெறத் தேவையில்லை.
இதுதொடர்பாக, தொழில்துறை உறவு சட்டம் 2020-இல் திருத்தங் களை முன்மொழியும் மசோதாவை தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வார் தாக் கல் செய்துள்ளார்.தொழிற்துறை உறவுச் சட்டம்- 2019, கடந்த ஆண்டு மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் அது திரும்பப்பெறப் பட்டு விட்டது.பின்னர் தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட தொழிற்துறை உறவுச் சட்டம்- 2020க்கான வரைவு மசோதாவில், 300-க்கும் குறைவானதொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் அரசு அனுமதியின்றி அவர்களைப் ‘பணிநீக்கம்’ செய்யலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்க்கட்சிகளும், தொழிற் சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்கெனவே 300-க்கும் குறைவான ஊழியர்களை கொண்ட நிறுவனங்கள், தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டது.இதையொட்டி, தொழில்துறை உறவுச் சட்டம் 2020-இல் பிரிவு 77(1)இல் திருத்தங்களை இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்த பிரிவின்படி,300-க்கும் குறைவான ஊழியர்களை கொண்ட நிறுவனங்கள், இனி ஊழியர்களை வெளியேற்றுவதற்கு முன்அரசிடம் அனுமதி கேட்க தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, ‘பணிநீக்கம் செய்யலாம்’ என்ற வார்த்தை, ‘ஊதியம் இல்லா விடுப்பில் அனுப்பலாம்’ என்று மாற்றப்பட்டுள்ளது. சந்தோஷ்குமார் இந்த மசோதாவைத் தாக்கல் செய்த நிலையில்,அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன. மசோதாவை தாக்கல்செய்து பேசிய அமைச்சர் சந்தோஷ் கங்வார், தொழில் துறை சட்டங்களில் 29 சட்ட பிரிவுகள் 4 ஆக குறைக்கப்பட்டு அவைஅனைத்தும் ஒப்புதல் பெறப்பட்டதாக கூறினார்.தற்போதைய சூழலில், 100-க்கும்குறைவான ஊழியர்களை கொண்டநிறுவனங்கள் மட்டுமே அரசின் அனுமதி இல்லாமல் ஊழியர்களைப் பணியமர்த்தவும், வெளியேற்றவும் அனுமதி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.