புதுதில்லி, ஜுன் 15- சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளுக்கு பத்து ஆண்டுகளுக்கு மே லாக உதவி வந்த பாஜக தலைவரை டிராக்டர் வாங்கி கொடுத்தபோது அம்மாநில காவல்துறையினர் கைது செய்தனர். சத்தீஷ்கர் மாநிலம் தந்தவாடா மாவட்ட பாஜக துணை தலைவர் ஜகத் பூஜா ரியும் அவரது கூட்டாளி ரமேஷ் உசேண்டி ஆகியோர் மாவோயிஸ்டுகளுக்கு டிரா க்டர் வாங்கிக் கொடுத்து உதவ முயன்றதாக கைது செய்யப்பட்டனர். கடந்த பத்து ஆண்டுகளாக மாவோ யிஸ்டுகளுக்கு தேவையான பொருட்களை வழங்கி வந்த துடன் அவர்களை சந்தித்து வந்ததை ஜகத் பூஜாரி ஒப்புக்கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ள னர். பிடிக்க உதவினால் ஐந்து லட்சம் ரூபாய் வழங்கு வதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட் தலைவர் அஜய் அலாமிக்காக ஜகத் பூஜாரி புதிய டிராக்டர் வாங்கியுள்ளார்.
கோவிட் ஊரடங்கைத் தொடர்ந்து உணவுப் பொ ருட்கள் கிடைக்காத நிலை யில் மாவோயிஸ்டுகள் நெல் சாகுபடி செய்ய இந்த டிராக்டர் வாங்கப்பட்டுள்ளது. டிராக்டர் வாங்கித்தருமாறு அஜய் அலாமி ஜகத் பூஜா ரியை தொடர்பு கொண்ட தொலைபேசி உரையாடலை காவல்துறையினர் பதிவு செய்திருந்தனர். ரமேஷ் உசேண்டியின் மனைவி பெயரில் வாங்கிய டிராக் டரை மாவோயிஸ்டுகளுக் காக கொண்டு செல்லும் வழி யில் பறிமுதல் செய்ததாக தந்தவாடா எஸ்.பி.அபிசேக் பல்லூக் தெரிவித்தார். ஒன்பது லட்சம் ரூபாய் விலையுள்ள டிராக்டர் வாங்குவதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதை ரமேஷ் உசேன்டியால் கூற முடியவில்லை. ஜகத் பூஜாரி கேட்டுக்கொண்டதன் பேரில் டிராக்டர் கொண்டு செல்லப்ப டுவதாக அவர் காவல்துறை யினரிடம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மாவோயிஸ்டு களுக்கு சீருடைகள், கால ணிகள், காகிதம், அச்சுப் பொறி (பிரிண்டர்) , தோட்டாக்கள், பேட்டரிகள் மற்றும் ரேடியோக்களையும் ஜகத் புஜாரி கொடுத்து வந்த தாக காவல்துறையினர் தெரி வித்தனர்.