கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் ரூ. 10 கோடிஊழல் முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டவரும், அண்மையில் பாஜகவுக்குத் தாவியவருமான முன்னாள் அமைச்சா் சியாமா பிரசாத் முகா்ஜி கைது செய்யப்பட் டுள்ளார்.மேற்குவங்க மாநிலம் பிஷ்ணுபூர் தொகுதி எம்எல்ஏவாகவும்,மம்தா பானர்ஜியின் 2016-21 ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும் இருந்தவர் சியாமா பிரசாத் முகர்ஜி. இவர், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்நிலையில்,அவர் ரூ. 10 கோடி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சியாமா பிரசாத் முகர்ஜி உள் ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, 2020-ஆம் ஆண்டு, அந்தத்துறையில் ஆன்லைன் மூலமான ரூ.10 கோடிக்கான காண்ட்ராக்ட் ஏலத்தில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதிலிருந்து தப்பிக்கும் முயற்சியாகவே, பாஜகவுக்குத் தாவினார். ஆனால், துரதிர்ஷ்டமாக மீண்டும்மம்தாவே ஆட்சிக்கு வந்துவிட்டார். அதைத்தொடர்ந்து, ரூ.10கோடி ஊழல் முறைகேடு புகாரில், சியாமா பிரசாத் முகர்ஜி, மேற்கு வங்க ஊழல் தடுப்பு காவல்துறையினரால் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். முகர்ஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை விசாரணைக் காக 4 நாட்கள் காவலில் எடுத் துள்ளனர்.
இதனிடையே சியாமா பிரசாத் முகர்ஜி கைது செய்யப்பட்டது பழிவாங்கல் நடவடிக்கை; திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த பிறகு முகர்ஜியை கைது செய்துள்ளனர் என்று பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் கொதித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தவரை முகர்ஜி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என பாஜக பிஷ்ணுபூர் மாவட்டத் தலைவர் சுஜீத் அகஸ்தியும் கொந்தளித்துள்ளார்.