புதுதில்லி:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கவலை அளிக்கும் வகையில் இருப்பதாகவும், அனைத்து தரப்பிலும் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையே பொருளாதார மந்த நிலைக்குக் காரணம் என்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.இதுதொடர்பாக கட்டுரையொன்றில் மன்மோகன் சிங் மேலும் கூறியிருப்பதாவது:
இந்திய பொருளாதாரத்தின் நிலைஆழமான கவலையை ஏற்படுத்துகிறது. இதனை நான் எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற முறையில் கூறவில்லை. இந்திய நாட்டின் குடிமகனாக, ஒரு பொருளாதார மாணவன் என்ற முறையிலேயே கூறுகிறேன்.பொருளாதார மந்த நிலைக்குசில உண்மைகளே சாட்சிகளாகியுள் ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவு கீழே போயுள்ளது. வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகமாக உள்ளது. வீட்டுநுகர்வு 40 ஆண்டுகளில் இல்லாத அளவு கீழே போயுள்ளது. வங்கி வராக்கடன் எப்போதும் இல்லாத அளவு உச்சத்தில் உள்ளது. மின்சார உற்பத்திவளர்ச்சி 15 ஆண்டுகள் இல்லாத அளவு குறைந்துள்ளது.தொழில் முனைவோர்கள், வங்கியாளர்கள், தொழிலதிபர்களிடம் அச்சம் நிலவுகிறது. பல தொழிலதிபர்கள் அரசாங்க அதிகாரிகளின் துன்புறுத்தலுக்கு பயந்து வாழ்கிறார்கள். பழிவாங்கும் பயத்தில் வங்கியாளர்கள் புதிய கடன்களை வழங்கத்தயங்குகிறார்கள். தொழில்முனைவோர் புதிய திட்டங்களைத் தயாரிக்கதயங்குகிறார்கள். தோல்வியின் பயம் வெளிப்புற நோக்கங்களுக்காகக் கூறப்படுகிறது. உதவியற்ற ஒரு நிலைநிலவுகிறது. வேதனை அடைந்த குடிமக்கள்தங்கள் குறைகளை வெளிப்படுத்த எங்கும் இடமில்லை. ஊடகங்கள், நீதித் துறை, ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் விசாரணை முகவர் போன்ற சுயாதீன நிறுவனங்கள் மீதான பொது நம்பிக்கை கடுமையாக அழிக்கப்பட்டுள்ளது.மக்களுக்குள்ள அவநம்பிக்கையும், அச்சமும், நம்பிக்கையின்மையும், நீடித்த மந்த நிலைக்கு காரணமாகியுள்ளது.இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார்.